Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

நாளை வெளியாகும் பைரவா!

Wednesday 11th Jan 2017 06:58 AM

பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் `பைரவா' படம் நாளை திரையரங்குளில் வெளியாகிறது. ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வரும்

பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் `பைரவா' படம்  நாளை திரையரங்குளில் வெளியாகிறது. ஒவ்வொரு நாளும் பரபரப்பை  ஏற்படுத்தி வரும் `பைரவா' படத்தில் 'அழகிய தமிழ்மகன்' இயக்குநர் பரதனுடன் விஜய் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை  விஜயா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு  இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நாளை வெளியாக உள்ள `பைரவா' படத்தின் மொத்த நீளம் 2 மணி 44(168 நிமிடங்கள்) நிமிடங்கள் என்று படக்குழு  தெரிவித்துள்ளது. இதில் முதல் பாகம் 1 மணி 21 நிமிடங்களும், இரண்டாம் பாகம் 1 மணி 27 நிமிடங்களும் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் நீளம் அதிகமாக இருந்ததாக படக்குழு அதனை சுருக்கியது குறிப்பிடத்தக்கது.

தணிக்கைக் குழு சோதனையில் 'யு' சான்றிதழை பெற்ற 'பைரவா' உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீசாகிறது. மேலும்  தமிழகத்தில் அதிகளவிலான (சுமார்  450) திரையரங்குகளில் 'பைரவா' வெளியாக உள்ளது. இதன்மூலம் முதல்நாள் வசூலில்   'கபாலி', 'வேதாளம்', 'தெறி' படங்களின் வசூலை 'பைரவா' முந்த வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.