Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

என்னை காமெடியனாக்குகிறார்கள் : நாசர்

Wednesday 20th Sep 2017 06:51 AM

They make me a comedy: Nasser

தமிழ் சினிமாவில் கேரக்டர் நடிகராக என்ட்ரி கொடுத்து பின்னர் அவதாரம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தவர் நாசர். பல படங்களில் அதிரடி வில்லனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக அவரை குணசித்ர நடிகராக்கிவிட்ட இயக்குனர்கள், சில படங்களில் காமெடியனாகவும் மாற்றி வருகிறார்கள். இதுபற்றி நாசர் கூறுகையில், இதுவரை நான் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து விட்டேன். எந்தமாதிரியான வேடங்களில் நடிக்க அழைத்தாலும் நான் மறுப்பதில்லை. ஒரு நடிகன் எந்தமாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிப்பது தான் அழகு என்பதால் நம்பிக்கொடுக்கிற வேடங்களை மறுக்காமல் நடித்து வருகிறேன். ஆனால், தற்போது சில படங்களில் என்னை காமெடியனாக்கி வருகிறார்கள். நானும் காமெடி வேடங்களில் நடித்து விடுவேன். என்றாலும் அதை ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு கொஞ்சம் பயம் ஏற்படும். அப்படி மனதளவில் பயம் ஏற்படும்போது டைரக்டர்களிடம் சொல்வேன். அப்போது அவர்கள், நல்லாதான் பண்றீங்க. சிரிக்கிற மாதிரிதான் இருக்கு என்பார்கள். அப்படி அவர்கள் கொடுக்கும் தைரியத்தில் நடித்து வருகிறேன். தற்போது நான் காமெடி வேடங்களில் நடித்துள்ள படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்கள் அங்கீகரித்து விட்டால் சந்தோசப்படுவேன் என்கிறார் நாசர்.