Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

துருக்கி எல்லையில் படக்குழுவினருக்கு சிக்கல்

Monday 11th Sep 2017 04:11 AM

The problem with the film crew on the Turkish border

துருக்கி எல்லையில் துருவ நட்சத்திரம் படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இயக்குநர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கி எல்லையில் படக்குழுவினரை தடுத்து நிறுத்தியுள்ளனர் அதிகாரிகள். இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது படக்குழு. இது தொடர்பாக கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் படக்குழுவினர் துருக்கி எல்லையில் சிக்கியுள்ளனர் 24 மணி நேரங்களுக்கு மேலாக சாலையில் நிற்கின்றனர். படக்குழுவிடம் சட்டபூர்வமான ஆவணங்கள் இருந்தும் படப்பிடிப்பு சாதனங்களுடன் குழுவை உள்ளே விட அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். படக்குழுவினர் ஜார்ஜியாவிலிருந்து சாலை மார்க்கமாக இஸ்தான்புல் செல்கின்றனர். கேமரா மற்றும் படப்பிடிப்புக்குத் தேவையான ஆடைகளுடன் இவர்கள் சென்றனர். இப்போது எல்லையில் அனுமதி கிடைக்காமல் சிக்கியுள்ளனர். அதிகாரிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.