Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

ஜோதிகாவின் தற்போதைய வருத்தம் இதுதான்

Sunday 10th Sep 2017 04:18 AM

This is the current sadness of Jyothika

ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 8 வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் மகளிர் மட்டும் படம் ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் அளித்த் பேட்டியில் ‘தமிழ் சினிமாவில் பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

ஒரு மாதவன் சுதாவிற்கு கொடுத்த வாய்ப்பினால் தான் இறுதிச்சுற்று உருவானது, அந்த படம் வெளிவந்து பிரமாண்ட வெற்றியை அடைந்தது.

ஆனால், அதுப்போல் தொடர்ந்து யாரும் பெண் இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கவில்லை’ என வருத்தமாக கூறியுள்ளார்.