Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

Saturday 09th Sep 2017 07:52 AM

This is not my India: ARRahman on the assassination of Gauri Langsh

இது என்னுடைய இந்தியா அல்ல என்று பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை தெரிவித்துள்ளார்.

தன்னுடைய 'ஒன் ஹார்ட்' கன்சர்ட் படத்தின் பிரீமியர் காட்சியை வெளியிட மும்பை வந்த ரஹ்மானிடம், பெங்களூருவிடம் நடந்த கவுரி லங்கேஷ் படுகொலை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய ரஹ்மான், ''கவுரி லங்கேஷின் கொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இவை அனைத்தும் இந்தியாவில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்'' என்றார்.

ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனை வைத்து உருவாக்கப்பட்ட 'திஸ் இஸ் இட்' (This is it) பிரம்மாண்ட வெற்றிபெற்ற கன்சர்ட் வகைத் திரைப்படம். இதை முன்மாதிரியாகக் கொண்டு உருவாகியிருக்கிறது 'ஒன் ஹார்ட்' படம்.

இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இன்று (செப். 8) வெளியாகி உள்ளது