Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

அஜித் மருத்துவமனையில் திடீர் அனுமதி.

Saturday 09th Sep 2017 06:57 AM

மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 

கணக்கிலடங்கா அறுவை சிகிச்கைகள். ஆங்காங்கே இரும்புத் தகடுகள் என்று சற்றேறக்குறைய ஒரு இரும்பு மனுஷனாகவே நடமாடிக் கொண்டிருக்கிறார் தல அஜீத்.

தான் நடிக்கும் படங்களில் வரும் மிக மிக கடினமான காட்சிகளை கூட, டூப் இல்லாமல் நடித்துவிட வேண்டும் என்கிற வெறி அவருக்கு உண்டு. அதன் காரணமாக வந்த இருப்பு பிளேட்டுகள்தான் இவையெல்லாம்.

அதிலும்,விவேகம் படத்திற்காக அஜீத் எடுத்துக் கொண்ட ரிஸ்க் சற்றே அதிகம்.‘மேக்கிங் ஆஃப் விவேகம்’ என்ற தலைப்பில் பல்கேரியாவில் எடுக்கப்பட்ட ரிஸ்க் காட்சிகளை தனியாக தொகுத்து திரையிட்டால் கூட விவேகம் பட வசூலில் பாதியை கல்லா கட்டிவிடலாம். (எதுக்கும் யோசிங்க சத்யஜோதி)

விவேகம் படத்திற்காக எவ்வளவு வலியை பொறுத்துக் கொண்டு நடித்தாரோ, அவ்வளவுக்கும் சேர்த்து சென்னையில் வைத்து பின்னி எடுத்துவிட்டதாம் உடம்பு.தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த அடி,மெல்ல வளர்ந்து ஆபரேஷன் அளவுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது.

அஜீத்தை பரிசோதித்த டாக்டர் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிவிட, நேற்று நள்ளிரவு சென்னையிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நன்கு தேர்ந்த டாக்டர்களை வெளி மருத்துவமனையிலிருந்து வரவழைத்து இந்த ஆபரேஷனை செய்து முடித்தார்களாம்.
ஆபரேஷனுக்கு முன்பும் சரி. பின்பும் சரி. வழக்கம் போல அஜீத் கூல் என்கிறது மருத்துவமனை வட்டாரம்.