Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் ஷட்டப் பண்ணுங்க பாடல் டீசர்!

Friday 08th Sep 2017 03:36 AM

The song teaser to shuttle the diamond on the internet!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி அதிக மக்களால் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில், மற்ற போட்டியாளர்களை விட பெரும்பாலான மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த  ‘களவாணி’ பட நாயகி ஓவியா நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சனுக்கு நாமினேட்டாகும் ஒவ்வொரு முறையும் அதிகபட்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் காப்பாற்றப்படும் அளவிற்கு மக்களிடம், குறிப்பாக இணையதளவாசிகளிடம் நல்ல அபிமானத்தைப் பெற்றிருந்தார் ஓவியா. ஓவியா புரட்சிப் படை, ஓவியா ஆர்மி என்ற குழுக்கள் இப்போதுவரை அவருக்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடின் போது  கஞ்சாக் கருப்பு மற்றும் ஓவியாவிற்கு இடையேயான வாக்குவாதத்தில் ஓவியா நீங்க ஷட்டப் பண்ணுங்க என்று கஞ்சாகருப்பை பார்த்து கூறுவார். அந்த ‘ஷட்டப் பண்ணுங்க’என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டது திரையுலகம்.

சைனிஷ் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாகவும், அஞ்சலி மற்றும் ஜனனி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்து வரும் படம் பலூன்.


அந்த படத்தில் ஒரு பாடலாக ஷட்டப் பண்ணுங்க என்பது போன்ற ஒரு பாடலை ஓவியாவுக்கு டெடிகேட் செய்யும் விதமாக பலூன்படத்தின் இணைத்திருப்பதாக இயக்குநர் சைனிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “there is a promo song in BaLLOON. and its related to shuttup pannunga. deticaated 2 OVIYA” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.