Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

பலூன் திரைப்படம் செப்டம்பர் – 27 இல் வெளியீடு!

Sunday 13th Aug 2017 09:54 AM

Balloon film release on September 27th!

ஜெய் – அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பலூன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என்று ஆரா சினிமாஸ் அறிவித்துள்ளது.

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளதுடன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

’70 எம்.எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து இத் திரைப்படத்தினைத் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.