Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் கௌரவ பரிசளிப்பு

Monday 17th Apr 2017 17:32 PM

கனடாவின் புகழ் பூத்த வியாபாரத்தலைவர்கள் நிகழ்வில் முக்கிய நிதிப்பங்களிப்பினை வழங்கி விழாவின் வெற்றிக்கு வழிசமைத்தார்கள்

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் இருபத்தாறாவது வருடாந்த இராப்போசனவிருந்துடன் கூடிய கௌரவ பரிசளிப்பு, கலைநிகழ்வுகள், மதிப்பளிக்கும் நிகழ்வுகள் என மிகவும் சிறப்பாக கடந்த கிழமை ராஜாவின் (Uthayan Gunarajah) தலைமை நிர்வாகத்தல் இயங்கிவரும் எஸ்டேட் பான்குவிட் அழகிய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த விருந்தினர்களுடன் மிகவும் அசத்தலாக நடந்தேறியது. மிகவும் சிறப்பாக நேரத்திட்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறியது. சிறந்த பாடல்கள் அடங்கிய இன்னிசை கேட்ப்போருக்கு இன்பம் கலந்த சந்தோசத்தினை வாரி வழங்கியது. சிறுமிகளின் பரதநாட்டியம் மிகவும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக நிகழ்ச்சியில் 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பங்குபெற்று மிகவும் அசத்தலாக இதயத்தில் இன்ப வெள்ளத்தினை ஊற்றெடுக்க வைத்தார்கள். கனடாவின் புகழ் பூத்த வியாபாரத்தலைவர்கள் நிகழ்வில் முக்கிய நிதிப்பங்களிப்பினை வழங்கி விழாவின் வெற்றிக்கு வழிசமைத்தார்கள். குறிப்பாக வியாபாரத் தலைவர் விலோசனன் சிவதர்மன் (Vilosanan Sivatharman) அவர்கள் நிர்வாகத்தில் முக்கிய பங்கெடுத்ததுடன் நிகழ்வின் அசத்தலான நகர்விட்கு ஏனைய நிர்வாக உறுப்பினர்களுடன் சேர்ந்து விழாவின் வெற்றிக்கு தங்களால் ஆனா உதவிகளை எவ்வித பலனும் எதிர்ப்பாராமல் செய்ததனை அவதானிக்க முடிந்தது.