Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ஐ.எஸ் இற்கு எதிராக போரிட்ட ஒன்ராறியோ பிரஜைக்கு மரியாதை!

Wednesday 11th Jan 2017 06:48 AM

மத்திய கிழக்கு நாடுகளில் நிலைக்கொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வட சிரியாவிலிருந்து போரிட்டு வந்த நிலையில்,

மத்திய கிழக்கு நாடுகளில் நிலைக்கொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வட சிரியாவிலிருந்து போரிட்டு வந்த நிலையில், உயிரிழந்த ஒன்ராறியோ பிரஜைக்கு கனடிய குர்திஷ் சமூகத்தினர் மரியாதை செலுத்தினர்.

சிரிய மக்களுக்காக போராடி உயிர்நீத்த குறித்த நபரை மாவீரனாக போற்றி, நேற்று (திங்கட்கிழமை) ஒட்டாவாவில் கூடி இந்த மரியாதை நிகழ்வு இடம்பெற்றது.

ஐ.எஸ்.-இற்கு எதிராக குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவில் இணைந்து போராடி வந்த 24 வயதுடைய நஸரினோ டசோன் என்ற நபர் கனடிய நபர் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்தார்.

குறித்த நபர், தான் ஈராக் மற்றும் துருக்கியில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்காக செல்வதாக தெரிவித்து கடந்த ஜுன் மாதம் கனடாவிலிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.