Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

அம்புலன்ஸ் விபத்தில் தம்பதிகள் பலி!

Wednesday 11th Jan 2017 06:46 AM

விடுமுறைக்காக சென்றிருந்த வினிபெக் தம்பதி அங்கு அம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சோகம், கியூபாவில் இடம்பெற்றுள்ளது.

விடுமுறைக்காக சென்றிருந்த வினிபெக் தம்பதி அங்கு அம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த சோகம், கியூபாவில் இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டு மற்றும் கணவரின் 50ஆவது பிறந்த தினம் என்பவற்றை கொண்டாடும் முகமாக அவர்கள் குடும்பத்துடன், கியூபா சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

கொண்டாட்டங்களின் பின்னர் ஓய்விலிருந்த பேளை மனைவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மனைவியுடன், கணவரும் அம்புலன்ஸில் ஏறிச் சென்றுள்ளார்.

வேகமாக வைத்தியசாலை நோக்கி பயணித்த அம்புலன்ஸ் சீமெந்து தடுப்பு ஒன்றின் மீது விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.