Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

கனேடிய அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ள பிரதமர் ரூடோ!

Tuesday 10th Jan 2017 08:25 AM

அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் ரூடோ கனேடிய அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவார் என

அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டு  ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் ரூடோ கனேடிய அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது ஆறு அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் மாற்றப்படக் கூடும் எனவும், நாளை ஜனவரி 10, இம்மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது    சர்வதேச வர்தகத்துறை அமைச்சராக உள்ள  Chrystia Freeland வெளியுறவுத் துறை அமைச்சராகவும், தற்போதைய பெண்கள் விவகார அமைச்சர் Patty Hajdu , ஜனநாயக அமைப்புக்கள் அமைச்சராகவும் நியமிக்கப்படக் கூடும்.

தற்போதைய தொழில் அமைச்சர் MaryAnn Mihychuk உம் வேறு துறைக்கு ஒன்றுக்கு நியமிக்கப்படக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.