Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் ஈடுபட்டு வரும் சீடாஸ் நிறுவனத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்!

Tuesday 10th Jan 2017 07:54 AM

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் கல்வி பயின்று வரும் வசதியற்ற மாணவர்களின் கல்வி அபிவிருத்தி பணியில் உதவி வரும் கனடிய “சீடாஸ்”

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் கல்வி பயின்று வரும் வசதியற்ற மாணவர்களின் கல்வி அபிவிருத்தி பணியில் உதவி வரும் கனடிய “சீடாஸ்” நிறுவனத்தின் பன்னிரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் 08- 01- 2017 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் நோர்த் யோர்க்கில் அமைந்துள்ள யோர்க் சிவிக் சென்டரில் நிறுவனத்தின் தலைவர் விஜயன் தலமையில் நடைபெற்றது.

கடந்த கால வருடாந்த அறிக்கையும் கூட்ட அறிக்கையினையும் செயலாளர் திரு. சசீந்திரன் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொருளாளர் திரு. ஜீவானந்தன் அவர்களால் கடந்தகால வரவு செலவு திட்ட அறிக்கையும் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து புதிய நிர்வாக தெரிவின் போது கூட்டத்தில் பங்கேற்றிருந்த சபையோர் அனைவரும் ஏகமனதான தீர்மானத்துடன் தற்போது நிர்வகித்துக் கொண்டு இருக்கும் நிர்வாகத்தினரையே இன்னும் ஒரு வருடத்துக்கான நிர்வாகத்தினை பொறுப்பேற்று நடத்த வேண்டும் என அன்புக்கட்டளையாக சபையோர் தெரிவித்தனர். சபையோரின் வேண்டுகோளுக்கிணங்க தலைவராக .விஜயன், செயலாளராக சசீந்திரன், பொருளாளராக ஜீவானந்தன் ஆகியோர் மீண்டும் தெரிவாகினர். மற்றும் நிர்வாக சபை 15 பேர் கொண்ட உறுப்பினர்களும் புதிதாகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் .

தொடர்ச்சியாக ஆண்டு விழாவிற்கான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இதில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ம் திகதி சீடாஸ் நிறுவனத்தின் ஆண்டு விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மற்றும் கடந்தகால செயற் திட்டங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி திட்டம் வழங்கப்பட்ட கிராமங்களின் பெயர்களும் சபையோர் முன் தெரிவிக்கப்பட்டன.

கிராமங்களின் பெயர்கள்

1, வீரச்சோலை, 2, குடி நிலம், 3, மந்தானை,4, தாண்டியடி, 5, காஞ்சீரம் ஆகிய கிராமத்தினை சேர்ந்த வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதெனவும் பொருளாளரினால் விதந்துரைக்கப்பட்டன.

நிகழ்வுக்கான ஊடக அனுசரணையும் பங்கு பற்றும் சிறார்களுக்கான சான்றிதழ் பொறுப்பினையும் தளிர் பொறுப்பேற்றுக் கொண்டது.