Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா

Tuesday 10th Jan 2017 05:09 AM

நீண்டகாலக் கல்விப்பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில்அர்ப்பணிப்புடனும் தூரநோக்குடனும் செயலாற்றி வருகின்றது

நீண்டகாலக் கல்விப்பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில்அர்ப்பணிப்புடனும் தூரநோக்குடனும் செயலாற்றி வருகின்றது

எமது தாயகத்தில் பல்வேறு பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் தமக்குக் கல்வியறிவூட்டிய பாடசாலைகளின் பெயரில் பழைய மாணவர் சங்கங்களை அமைத்து அவற்றின் மூலம் பல நற்காரியங்களை ஆற்றிவருகின்றார்கள்.

இந்தவகையில் தீவகத்தின் கலைக் கோயிலாகத் திகழும் வேலணை மத்திய கல்லூரியின் (வேலணை மத்திய மகா வித்தியாலயம்) பழைய மாணவர் சங்கமானது முன்னாள் அதிபர்கள் அமரர் திரு. பொ. கேதாரநாதன் திரு. சு. கலாதரன் மற்றும் பிரதி அதிபர் திரு பொன் ரூடவ்சன் ஆகியோரது வேண்டுகோளுக்கிணங்க 1995ம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் நாள் (02-08- 1995) அங்குரார்ப்பணஞ்செய்யப்பட்டுக் கனடாவின் ஒன்ராரியோ மாகாணச் சட்டவிதிகளுக்கமைய இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுக் (பதிவு இலக்கம்: 1852223) கடந்த 22 ஆண்டுகளாக ரூசூ39;யாதும் ஊரே யாவரும் கேளிர்ரூஙரழவ் என்ற கணியன் பூங்குன்றனாரின் வாசகத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் அதன் மூலம் எமது தாயக மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமன்றி இங்குள்ள பழைய மாணவர்கள் முன்னாள் அதிபர் ஆசிரியர்கள்
ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்காகவும் சிறந்த முறையில் தன்னலமற்ற சேவையாற்றி வருவது இங்குள்ள நேர வசதியின்மையைக் கருத்தில் கொள்ளுமிடத்து மிகக்கடினமான செயற்பாடாகும்.

எமது கல்விப் பாரம்பரியமானது நீண்ட போராட்டம் மற்றும் அர்ப்பணிப்புக்கள் மூலம் பேணப்பட்டுப் பல தியாகங்கள் மூலம் மலர்ச்சிகண்டது. இதன் தொடர்ச்சியாகத் தற்போதய மாணவர்களின் கல்வி மேம்பாடு என்பது எங்கள் சமுதாயத்தின் அறிவுப்பண்பாடு சார்ந்த கனவுகள் மற்றும் சமூகத்தின் நலிந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்வதாக அமைய வேண்டும். கூடவே 21ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதார கட்டமைப்புக்கு ரூடவ்டுகொடுப்பதாகவும் அமைய வேண்டும் என்பதே என் போன்ற பழைய மாணவர்களின் அவா.

தற்போதய நிர்வாகத்தினராகிய நாம் எமது தாயக மக்களின் நீண்ட காலக்கல்விப் பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில் எமது சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து எமது இளைய சந்ததியினரின் கல்வி கலாச்சார முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இச்சங்கம் தனது நீண்டகாலச் சிறப்பான செயற்பாடுகளின் மூலம் கனடாவில் இயங்கும் மூத்த மற்றும் முதன்மையான பழைய மாணவர் சங்கங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. குறிப்பாகக் கடந்த ஆறாண்டுகளாக இச்சங்கம் நடைமுறைப்படுத்திவரும் அர்த்தமுள்ள செயற்திட்டங்கள் மிகவும் பயனுள்ளதும் அனைவராலும்

பாராட்டப்பட்டும் மற்றவர்களால் பின்பற்றப்பட்டும் வருகின்றதென்றால் அது மிகையல்ல. இதற்குத் தூய்மையான சிந்தனை உயர்ந்த இலட்சியம் செம்மையான செயற்பாடு உண்மையான உழைப்பு சிறந்த நிர்வாகம் என்ற எமது இலக்கும் அதை அடைய நாம் பின்பற்றுகின்ற இலக்கணமும் பழைய மாணவர்கள் புலம்பெயர் மண்ணின் வர்த்தகப் பிரமுகர்கள் பத்திரிகை வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தினரின் ஆதரவும் தான் பிரதான காரணங்கள் என்பதைக் கூறிக்கொள்வதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைகின்றேன். மேலும் கல்லூரிக்கு இப்புத்தாண்டு முதல் மூன்று புதிய பிரதி அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கல்லூரி தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்வது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சங்கத்தின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு அடுத்துவரும் நிர்வாகங்களுக்கும் தங்கள் நல்லாதரவு தொடர வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதோடு இதுவரை வழங்கிய ஆதரவிற்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் இவ்வரிய சந்தர்ப்பத்தில்; மிக்க மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்று எமக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்டி வளர்த்து ஆற்றலில் சிறந்தோர்களாக்கிய எமது கல்லூரி அன்னைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இதுவேயாகும்.

சி. இளஞ்செழியன் (தலைவர்)
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா

பிற்குறிப்பு: சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் வழமைபோல் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.