Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

குடிவரவாளர்கள், அகதிகள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்! வேட்ப்பாளரின் கோரிக்கை

Monday 09th Jan 2017 05:19 AM

கனடாவினுள் அனுமதிக்கப்படும் குடிவரவாளர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரின் என்ணிக்கை குறைக்கப்படவேண்டும் என பழமைவாதக்

கனடாவினுள் அனுமதிக்கப்படும்  குடிவரவாளர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரின் என்ணிக்கை குறைக்கப்படவேண்டும் என  பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான முந்நாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Steven Blaney அவர்கள் கூறியுள்ளார்.

இதன்மூலம் குடிவரவாளர்கள் மற்றும் அகதிகள் கனேடிய சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வது இலகுவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய குடிவரவாளர்களை கனேடிய சமூகத்துடன் ஒன்றிணைப்பதற்கு, நகரங்களுக்கும், மாகாணங்களுக்கும் இருக்கும் ஆற்றலைக் கருத்திற்கொள்ளாது, வெறும் அரசியல் நோக்கங்களுக்காகவே லிபரல் அரசின் குடிவரவு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலும், ஆங்கிலம் அல்லது பிரென்சு மொழியைக் கற்றுக்கொள்ள முடியாமலும் உள்ள குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளின் "கனவுகளைச் சிதைப்பதாக"  அவர் இந்த அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.