Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

தங்கள் குற்றப்பதிவுகளை கனடாவில் அழிப்பது எப்படி? : சிவ.பஞ்சலிங்கம் B.Com

Wednesday 11th Oct 2017 03:08 AM

How to Destroy Their Crime Reports in Canada : Shiva Panchalingam B.Com

என்றோ ஒரு நாள் தெரிந்தோ தெரியாமலோ கனடாவில் பொலிசாரின் கைதுகளிலும் விசாரணைகளிலும் சிக்கியிருந்த துரஅதிர்ஸ்டம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

அந்த நேரம்:

தங்கள் கைவிரல் அடையாளங்கள் எடுக்கப்பட்டிருக்கும். [Finger Print Record] அத்துடன் சேர்த்து கிரிமினல் சட்டம் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவராக தங்களின் படங்களும் எடுக்கப்பட்டிருக்கும்.

இவை யாவற்றுடனும் சேர்த்து தங்கள் பெயர் விபரங்கள் யாவும் குறிப்பிடப்பட்டு என்றோ ஒரு நாள் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபராக பொலிசாரின் மின் கணனி தகவல் மையத்தின் பதிவுகளில் இருக்கும்.

இது தங்களின் கனடா வாழ்வில் நடந்து ஒரு மறக்கப்பட்ட சம்பவமாக தற்போது இருக்கலாம். நீதிமன்றத்தின் விசாரணையில் குற்றச்சாட்டிலிருந்து சில நேரம் தப்பியும் இருக்கலாம்.

ஆனால்……….? குற்றம் சாட்டப்பட்ட போது பொலிசாரால் எடுக்கப்பட்ட, கைவிரல் அடையாளங்கள்!, குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தங்கள் திருமுகங்கள்! பெயர் விபரங்கள்! யாவும் அகற்றப்படாது பொலீஸ் பதிவுகளில் தொடர்ந்து இருக்கும்.

என்றோ ஒருநாள் நடந்த பிரச்சனையில் எடுக்கப்பட்ட பதிவுகள் அகற்றப்படாதிருப்பது ஒரு பிரச்சனையில்லாத மாதிரியே தங்களுக்கு தென்படும்.

ஆனால், சில நேரங்களில் தொடர்ந்து அமைதியாக வாழும் ஒரு மனிதனின் வாழ்வில் இப் பதிவுகள் யாவும் நின்று, நின்று உதைக்கும் போது இதற்கு ஒரு தீர்வு இல்லையா? என ஏங்கப் பண்ணும்.

ஆனால், அதற்கு ஒரு தீர்வு உண்டு! தொடர்ந்து பிரச்சனையேதுமில்லாது சமூகத்தில் அமைதியாக வாழ்கின்றவர்கள் மற்றும் வாழ விரும்புவர்கள் தங்களுக்கு மனுச் செய்து இக்குற்றப் பதிவுகளை அழித்து விடுங்கள் என கனடாவின் பொலீஸ் பிரிவினர் அழைக்கின்றனர் என்பதனை அறிந்து கொண்டீர்களா?

இதனை ஆங்கிலத்தில்,

REQUEST FOR,“DESTRUCTION OF ADULT FINGER PRINTS,
PHOTOGRAPHS AND RECORDS OF DISPOSITION ”

என குறிப்பிடப்படும்.

ரொரன்ரோ நகர பொலீஸ் பிரிவுகளில் பதியப்பட்டிருக்கும் பதிவுகளை அகற்றும் இந்த கோரிக்கைக்கு எதுவிதமான பண செலவுமில்லை. வக்கீலின் தேவையும் இல்லை! எல்லாம் இலவசமாக செய்து முடிக்கலாம்.

பின்வரும் இணையதளத்தினுள் சென்று தகவல்களை அறிந்து கொள்வதுடன்
விண்ணப்ப படிவத்தினையும் பதிவு இறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
www.torontopolice.on.ca/Publications/Files/Forms/FingerPrint_destruction.Pdf

விண்ணப்ப படிவத்தில் பின்வரும் கேள்விகளுக்கு பதில்கள் வழங்கப்படல் வேண்டும். பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், பிறந்த ஆண்டு, மாதம, திகதி உட்பட கைது செய்யப்பட்ட போது வேறு பெயரில் இருந்தால் அது பற்றிய விபரங்கள்!

வக்கீல் அல்லது முகவர் நியமித்தால் அது பற்றிய விபரங்கள்! குற்றச்சாட்டு தொடர்பான விபரங்கள்!

(அதாவது இறுதியாக நீதிமன்றத்திற்கு சமூகம் அளித்த திகதி, நீதிமன்ற இடம், குற்றசாட்டு, தீர்ப்பு போன்றவை.)

மேற்குறிப்பிட்ட தகவல்களை இவ்விண்ணப்பத்தில் வழங்கி, பின்வரும் விலாசத்திற்கு தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
C1

தொலைநகல் மூலம் அனுப்புவதானால், Attention to: Criminal Records என குறிப்பிட்டு இம் மனுவினை (416) 808-8202 என்ற தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்பி விட்டால் சரி! விண்ணப்பம் கிடைத்ததும் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி கடிதம் அனுப்பி வைப்பார்கள்.

தொடர்ந்து கடந்த வருடங்களில் கிரிமினல் குற்றசாட்டுகளில் ஈடுபடாது ஒழுங்கான பிரஜையாக வாழ்ந்து வருகின்றீர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பு யாவற்றினையும் பூரணமாக அழித்து விட்டு அதனை தபாலில் தங்களுக்கு அறிவிப்பார்கள்! தங்களின் பிரச்சனைகள் யாவும் இலகுவில் முடிந்து விடும்.

ஆனால் இங்கு மனுச்செய்பவர் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவராக இருத்தல்
வேண்டும்.

(1) குற்றம் சாட்டப்பட்டவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
(2) இறுதியாக நீதிமன்றத்திற்கு சமூகம் அளித்து குறைந்தது ஐந்து மாதங்கள் கடந்திருக்க வேண்டும். இக் காலங்களுக்குள் வேறு எந்த குற்றச் சாட்டுகளோ அல்லது நீதிமன்ற வழக்குகளோ நிலுவையில் இருத்தல் கூடாது.

சில நேரங்களில் தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்ற பதிலும் கடிதத்தில் வரலாம். அப்படி வந்திருந்தால் அது கிடைத்து 60 நாட்களுக்கிடையில் விரும்பினால் இதே பொலீஸ் பிரிவின் மேலிடத்திற்கு எழுத்தில் மேல் முறையீடு (Appeal) செய்யலாம்.

மேன்முறையீடு செய்யும் முகவரி:
C2

இங்கு குறிப்பிடப்பட்ட ரொரன்ரோ நகரின் பொலிஸ் குற்றப்பதிவுகள் தவிர, கனடாவின் ஏனைய நகர பொலீஸ் பிரிவுகளில் பதியப்பட்ட குற்றப்பதிவுகள் என்றால் சற்று மாறுதலான சட்ட ஒழுங்கு விதிகளுடன் இதே மாதிரி விண்ணப்பித்து சகல பதிவுகளையும் அழிக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டது நீதிமன்றத்தினால் பாரிய நிலையில் தீர்ப்புகளினால் தண்டிக்கப்படாது பொலீஸ் பதிவுகளில் உள்ள குற்றசாட்டுகள் மட்டுமேயாகும்.

ஆனால் நீதிமன்றத்தில் என்றோ ஒரு நாள் பாரிய குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டவர்களின் குற்றங்களில் பதிவுகளை அழித்து, சட்டத்தின் முன்பு “மன்னிப்பு” (PARDON) என்பதனை நிரந்தரமாக பெறவேண்டுமாயின் மனுச் செய்ய வேண்டிய இடம் இதுவேயாகும்.

கனடாவின் தேசிய மன்னிப்புச்சபை என குறிப்பிடப்படும் இந்நிறுவனத்தின் விபரங்கள், விலாசங்கள் பின்வருமாறு,
C3

தண்டனை பெற்று குறைந்தது மூன்று வருடங்களின் பின்பே மனுசெய்யலாம்.

இங்கு மனுச்செய்ய வேண்டிய விண்ணப்பபடிவங்களை இவ் இணையதளத்திலிருந்து பதிவு இறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் மனுச் செய்ய முன்பு பின்வரும் பத்திரங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய இடங்களில் பெற்று, அவற்றினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

அவை யாவன பின்வருமாறு:

(1) கைவிரல் அடையாளங்கள் எடுத்து கனடாவின் தலைநகரில் இருக்கும் ஆர். சி. எம்.பி அலுவலகத்துக்கு அனுப்பி பதிவில் இருக்கும் கிரிமினல் தடயங்கள் யாவும் எவை என்பது பெற்றுக் கொள்ள வேண்டிய முதலாவது பத்திரம் ஆகும். (Proof of Convictions) தங்களின் கைவிரல் அடையாளங்களை எடுத்து மின் அஞ்சல் மூலம் அனுப்பி, இப்பத்திரத்தினை எடுத்து தர உதவும் அலுவலகம் ரொரன்ரோவில் பின்வரும் விலாசத்திலிருந்து செயல்படுகின்றது.
C4

இவ் அலுவலகத்தினூடாக செய்து தரும் இப்பணிகளுக்கு சிறு கட்டணம் அறவிடுவார்கள். 120 நாட்களுக்கிடையில் பதிவில் உள்ள குற்றவியல் தடயங்கள் தபாலில் கிடைத்து விடும்.

(2) விசாரணை நடந்த நீதிமன்றத்தின் அலுவலகத்தில் சிறு தொகை கட்டணம் செலுத்தி வழக்கு தொடர்பான விபரப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டியது இரண்டாவது பத்திரம் ஆகும். (OBTAIN COURT DOCUMENTS).

(3) உள்ளுர் பொலீஸ் நிலையத்திற்கு சென்று மேலதிக குற்றச் சாட்டுகள் பதிவுகள் எதுவுமில்லை என்ற சான்றிதழ் பெற்று வைத்து கொள்ள வேண்டியது மூன்றாவது பத்திரம் ஆகும். (POLICE CHECKING RECORDS).

(4) ஆள் அடையாளத்தினை உறுதி செய்யும் அடையாள அட்டைகளின் பிரதிகள் எடுத்து வைத்திருக்க வேண்டியது நான்காவது பத்திரம். I(DENTIFICATIONS)

இவை யாவற்றினையும் விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து அவர்களுக்குரிய கட்டணத்துடன் (தற்போது $150;) மேற் குறிப்பிட்ட கனடாவின் தேசிய மன்னிப்பு சபைக்கு (National Parole Board) அனுப்பி வைத்தால் சரி. பொலீஸ் பதிவுகளில் உள்ள குற்றங்கள் உட்பட சகல குற்றப்பிரிவுகளும் அழித்து மன்னிப்பு வழங்க தகுதியானவராக இருந்தால, அவை உறுதி செய்யப்பட்டு 18 மாதங்களுக்கு இடையில் கடிதங்களில் “மன்னிப்பு வழங்கப்பட்டது” என உறுதி செய்து வரும். இப் பதிவுகளை அழிக்காவிட்டால் மனிதனாக வாழ காலம் கடந்து ஞானம் வந்து விரும்பினாலும், பதிவில் இருக்கும் குற்ற பதிவுகள் வாழ்வின் முன்னேற்றத்தினை நின்று நின்று உதைக்கும்.

சிவ.பஞ்சலிங்கம், B.Com-