Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

'தமிழேந்தல்' திரு.மா.க ஈழவேந்தன் அவர்களின் மதிப்பளிப்பு

Monday 09th Oct 2017 16:13 PM

சனநாயக மிகுதி கொண்டு ஒன்று திரண்டு வாழ்த்தியமை புரிந்தது.

ஆயிரம் நூல்கள் வாசித்தது போன்ற அறிவாற்றலை மனதில் நிரப்பியிருந்தது!!!!!!!!!!!!!!!!!!!!!

 (07-102017) கனடா செல்வச் சந்நிதி முருகன் ஆயலத்தில் நடைபெற்ற 'தமிழேந்தல்' திரு.மா.க ஈழவேந்தன் அவர்களின் மதிப்பளிப்பு குறித்த பார்வை.
நிகழ்வு 6:01 இக்கு
மாவீரர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் அண்ணன், அண்ணி திரு.பரமு சிவசுப்பிரமணியம், செல்வராணி அவர்களின் ஈகைச் சுடரேற்றலோடு ஆரம்பமானது
அமைதி வணக்கம், உறுதிமொழி ஏற்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

வாழ்த்து!
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் இயக்கம் 'தமிழ்த் தேசியப் பேரியக்கம்' ஆகும் இதன் தலைவரும் ஐயா ஈழவேந்தனின் தமிழ்த்தேசியக் கொள்கை வழி தோழருமான திரு.பெ.மணியரசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. அச்செய்தியை அவ்வியக்கத்தைச் சேர்ந்த திரு. க.இளம்பருதி அவர்கள் படித்தார். மிகக் கனதியான அவ்வாழ்த்துச் செய்தியை இத்துடன் இணைத்திருக்கின்றேன்.

சுழலும் சொற்போர்:

சுழலும் சொற்போர் அரங்கம் பாணியில் ஈழவேந்தன் மீது நூறு கணைகள் என்ற கேள்வி நிகழ்ச்சி நடைபெற்றது. 1948 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஈழவேந்தன் கடந்து வந்த அரசியல் பாதையை கேள்விகள் மூலம் தொடுக்க ஈழவேந்தன் அவர்கள் இரத்தினச்சுருக்கமாக பதில் கொடுத்தார்.
ஐயா ஈழவேந்தன் தனது பதிலில் சங்கஇலக்கியம், பாவேந்தர் கவிதை, தமிழ்த் தேசிய வாதிகளான மா.போ.சி, திரு.வி.க, மறைமலை அடிகள், வள்ளலார், தலைவர் பிரபாகரன்..., , ஐம்பெரும் காப்பியங்கள், உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் கவிதை, உலக வரலாற்று ஆசிரியர்கள், தலைவர்கள், புரட்சியாளர்கள் திருவள்ளுவர் என பலரின் கருத்துகளை எடுத்துக்காட்டாக சொல்லி பதில் சொன்னதானது அவரின் அறிவு உச்சத்தைக் காட்டி நின்றதோடு மண்டுமல்லாது அவையோருக்கும் ஒரு பெரும் தமிழத்தேசிய வரலாற்றை கற்றதைப் போன்றதாக அமைந்தது.

கவிப்பொழிவு

திரு.முல்லைமதி அவர்கள் ஐயாவின் தமிழ்த்தேசிய பணியை தன்கவிவரிகளில் பொழிந்தார்

சிறுவர்களின் கேள்விக் கணை:
சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று இந்நிகழ்வில் மேடையில் ஐந்து வயது சிறுவர் முதல் 85 வயது முதியவர் வரையில் பங்குபற்றியிருந்தனர்.
கவி, இசை, தமிழ்க்கோ .... போன்ற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஐயா ஈழவேந்தனை செவ்வி கண்டமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

முடிசூடல்:
முதுபெரும் கவிஞர் ச.வே பஞ்சாச்சரம் அவர்கள் வழிகாட்டலில் ஈழவேந்தன் ஐயா அவர்களின் 65 ஆண்டு கால தமிழ்த்தேசியப் பணியை போற்றும் விதமாக அவருக்கு முடிசூட்டி மதிப்பளிக்கப்பட்டது. முடியினை மாவீரர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் அண்ணன் அண்ணி பரமு சிவசுப்பிரமணியம், செல்வராணி ஆகியோர் செய்துவைத்தனர்.

தலைமை அமைச்சர் வாழ்த்து:

நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் மாண்பு மிகு வி.உருத்திரக்குமரன் அவர்களின் செய்தியை திரு.ராஜன் அவர்கள் மன்றில் படித்தார். (செய்தி இணைக்கப்பட்டுள்ளது)

வாழ்த்து:
திருமதி உசா சிறீஸ்கந்தராஜா அவர்கள் ஐயாவின் பணி சிறக்க வாழ்த்தினார்.

வழக்கறிஞர் வாழ்த்து:
வழக்கறிஞரும் ஐயா ஈழவேந்தன் அவர்களை இளமையிலேயே அறிந்து நட்டுபுக்கொண்டவருமான திரு.கனக மனோகரன் அவர்கள் ஐயாவின் தமிழரசு கட்சி பங்கேற்பு குறித்த நிகழ்வுகளை பட்டியல் இட்டு வாழ்த்திப் பேசினார்.

பிரபலம் வாழ்த்து:
சிறப்பு மிகு பாடகரும் 'நிவாரணம்' மனிதாபிமான அமைப்பின் தலைமை இயக்குனரும், 'மின்னல்' இசை நிகழ்வின் நெறியாளருமான திரு. செந்தில்குமரன் அவர்கள் ஈழவேந்தன் ஐயாவுக்கு பொற்கிளி வழங்கி பெருமைப்படுத்தினார்.

ஊடகவியலாளர் வாழ்த்து:
பிரபல ஒலி ஊடகவியலாளரான சத்தி பரமலிங்கம் அவர்கள் வானொலி ஊடகங்களில் ஐயாவின் பங்களிப்பு அன்றும் இன்றும் என்பதை நினைவு கூர்ந்து வாழ்த்திப் பேசினார்.

தளிர் ஆசிரியர் :

தளிர் ஆசிரியர் திருநிறைசெல்வர் சிவமோகன் அவர்கள் ஈழவேந்தன் ஐயாவை பொன்னாடை போர்த்து மதிப்பளித்து வாழ்த்தினார்.

வாழ்த்து
திருமதி. ரெஜீனா யோசப் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.

வாழ்த்து
தமிழ்த்தாய் மன்ற துணைப் பொருளாளர் கவிஞர் இராசநான் அவர்கள் வாழ்த்து

வாழ்த்து
திரு. திருநந்தி அவர்கள் மலர் மாலை அணிவித்து வாழ்த்திப் பேசினார்.

ஊடகங்கள்:
கனடாவில் தமிழர் மத்தியில் முதன்மையாகப் பேசப்படும் தமிழ்த்தேசிய அச்சு ஊடகங்களான 'ஈழமுரசு', ;உலகத்தமிழர்' போன்ற ஏடுகள் ஐயா ஈழவேந்தனின் மதிப்பளிப்பு நிகழ்வை முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன.

நிகழ்ச்சி தொகுப்பளர்கள்:
திரு. ஞானம் அன்ரனி, திரு.வேந்தன், திரு.ராஜா, திரு.முகுந்தமுரளி ஆகியோர் நிகழ்வை தொகுத்து தொய்வின்றி வழங்கினார்.

வசந்தம் வாழ்த்து:

'வசந்தம்' அமைப்பின் நிறுவனர் முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் ஐயாவின் நாடுகள் பற்றிய அறிவாற்றலை பாராட்டிப் பேசினார்.

அமைச்சர் வாழ்த்து:

நாடுகடந்த தமிழீழ அரசின் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. ஜோ அன்ரனி அவர்கள் ஐயாவின் தமிழீழ விடுதலை முன்னெடுப்பு குறித்து வாழ்த்திப் பேசினார்.

அறிவியல் அமையம் வாழ்த்து:
டூறம் தமிழ் பண்பாட்டு அறிவியல் அமையம் சார்வில் திருமதி. வசந்தா வைத்திலிங்கம் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.

ஆவணக் காப்பகம் வாழ்த்து:
வல்வை ஆவணக் காப்பகம் சார்பில் திரு.நகுலசிகாமணி அவர்கள் ஐயாவின் தமிழ்த்தேசிய ஆவண காப்பு பற்றி நினைவுரை நிகழ்த்தினார்.

வாழ்த்து
முனைவர் போல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

வாழ்த்து
திரு.வேல்லாயுதம் வாழ்த்து தெரிவித்தார்.

கந்தமுருகேசனார் வாழ்த்து:
கந்தமுருகேசனார் பண்பாட்டு அமையப் பொருப்பளர் திரு.மு.க தமிழ் அவர்கள் வாழ்த்ரை வழங்கினார்.

வாழ்த்துரை வழங்கிய பலர் நமக்கிடையே கருத்து முரண் இருந்தாலும்.... அறிவாற்றல், சாத படிப்புமிக்கவர் என்ற பதம் பல தடவை பயன்படுத்தியது விழாவில் கேட்க முடிந்தது. இதன் அடிப்படையில் பார்த்தால் பல்வேறு பட்ட கருத்தியல் கொண்டவர்கள் சனநாயக மிகுதி கொண்டு ஒன்று திரண்டு வாழ்த்தியமை புரிந்தது.
ஐயா ஈழவேந்தனைச் சுற்றிய கேள்விகள் பதில்கள்... வாழ்த்துகள் போன்றவை அந்நிகழ்வில் இருந்த மூன்று மணிநேரத்தில் ஆயிரம் நூல்கள் வாசித்தது போன்ற அறிவாற்றலை மனதில் நிரப்பியிருந்தது பேற்றுதற்குரியது.

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 109: file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/b926a84d69382f9fcaa985067791bbc1d1c05fb2): failed to open stream: Disk quota exceeded

  1. in Filesystem.php line 109
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/b926a84d69382f9fcaa985067791bbc1d1c05fb2): failed to open stream: Disk quota exceeded', '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '109', array('path' => '/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/b926a84d69382f9fcaa985067791bbc1d1c05fb2', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"0HK3kVi7qbRenqsCaSTo8HREuBKRtgsPqdg7TSPD";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13844";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384348;s:1:"c";i:1508384348;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/b926a84d69382f9fcaa985067791bbc1d1c05fb2', 'a:4:{s:6:"_token";s:40:"0HK3kVi7qbRenqsCaSTo8HREuBKRtgsPqdg7TSPD";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13844";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384348;s:1:"c";i:1508384348;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 109
  4. at Filesystem->put('/homepages/34/d372342306/htdocs/test.tamilsguide/storage/framework/sessions/b926a84d69382f9fcaa985067791bbc1d1c05fb2', 'a:4:{s:6:"_token";s:40:"0HK3kVi7qbRenqsCaSTo8HREuBKRtgsPqdg7TSPD";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13844";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384348;s:1:"c";i:1508384348;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('b926a84d69382f9fcaa985067791bbc1d1c05fb2', 'a:4:{s:6:"_token";s:40:"0HK3kVi7qbRenqsCaSTo8HREuBKRtgsPqdg7TSPD";s:9:"_previous";a:1:{s:3:"url";s:45:"http://tamilsguide.com/blog/canada-news/13844";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1508384348;s:1:"c";i:1508384348;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58