Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

திரு லோகன் லோகேஸ்வரன் அ வர்களுக் கு"சேவா சக்கரவர்த்தி" என்னும் பட்டம்

Wednesday 13th Sep 2017 19:41 PM

"ஓம் சைன்; லோகன்"

கனடாவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக "ஓம் சைன்ஸ்" என்னும் அச்சு மற்றும் விளம்பர வடிவமைப்புஈ அதனோடு இணைந்து சைன்ஸ் என்று அழைக்கப்படும் விளம்பரப் பலகைகள் மற்றும் அலங்கார விளம்பரங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருபவர் தான் "ஓம் சைன்; லோகன்" என்று அன்பாக அழைக்கப்படும் திரு லோகேஸ்வரன். அவரது துணைவியார் திருமதி சாந்தி லோகன்.
இன்று அவர்களுக்கான "சஸ்டி அப்த பூர்த்தி விழா (60ம் கல்யாண வைபவம்) ஸ்காபுறோவில் மார்ககம் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆதிபராசக்தி இந்து ஆலய மண்டபத்தில் காலை 9.30 மணி தொடக்கம் பக்தி பூர்வமாகவும் வேத மந்திரங்கள் பல குருமார்கள் ஓதியவண்ணம் அமர்ந்திருக்கவும் நடைபெற, லோகன்-சாந்தி தம்பதிகள் மணக்கோலத்துடன் அமர்ந்திருந்தனர்.

ஆலயத்தில் லோகன்-சாந்தி இருவரினதும் பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நணபர்கள் என பலர் கூடியிருந்த அவர்களை வாழ்த்துவதற்கு தயாராக இருந்தனர்.

ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ சந்திரமௌலி சாஸ்த்திரி அவர்கள் தலைமையில் தகைமையும் அனுபவமும் வாய்ந்த குருமார்கள் வேத மந்திரஙகளை ஓதிய வண்ணம் யாகம் மற்றும் பூசைகளை நடத்தினர்.

அங்கு கூடியிருந்த அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியுடன் அமைதியாக அமர்ந்திருந்து அனைத்து அம்சங்களையும் பார்த்து மகிழ்ந்தனர்.

ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ சந்திரமௌலி சாஸ்த்திரி அவர்கள் சார்பிலும் ஆலயத்தின் தொண்டர்கள் சார்பிலும் திரு லோகன் லோகேஸ்வரன் அ வர்களுக் "சேவா சக்கரவர்த்தி" என்னும் பட்டம் வழஙகிக் கௌரவிக்கபபட்டது

.