Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

கௌரவத்திற்காக இளம் தம்பதிகள் கொடூரக் கொலை!

Monday 11th Sep 2017 03:43 AM

Young couple murdering martyrdom for dignity!

கௌரவக் கொலை வழக்கு தொடர்பாக கனடாவில் வசித்து வரும் இருவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது,

இந்தியாவைச் சேர்ந்த சுர்ஜீத் சிங் படேஷா, அவரது சகோதரி மல்கித் கவுர் சித்து, மல்கித்தின் மகள், ஜஸ்வீந்தர் கவுர், ஆகியோர் கனடாவில் குடியுரிமைப் பெற்று வசித்து வந்துள்ளனர்.

ஜஸ்வீந்தர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்திருந்தபோது. மிது சித்து என்பரை இரகசியமாக திருமணம் செய்து கொண்டதன் பின்னர் கனடாவிற்கு திரும்பிச் சென்றுள்ளார்.

பின்னர் குறித்த திருமணம் தொடர்பில் தாயாரிடமும், மாமாவிடமும் ஜஸ்வீந்தர் தெரிவித்த பின்னர். கணவனுடன் சேர்ந்து வாழ ஜஸ்வீந்தர் மீண்டும் இந்தியா திரும்பி வந்துள்ளார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு ஜஸ்வீந்தர் மற்றும், மிது சித்து மர்மக் கும்பலினால் இந்தியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கூலிப்படையினைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களை கனடாவில் வசிக்கும் ஜஸ்வீந்தரின் தாயாரும், மாமாவுமே ஏவிவிட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குறித்த சந்தேக நபர்களை இந்தியாவிற்கு திருப்புமாறு இந்திய மத்திய அரசு, கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் நீதித்துறை அமைச்சர் அதற்கு ஒப்புதல் வழங்கினார்.

எனினும் அதற்கு எதிராக மேன் முறையீடு செய்து ஜஸ்வீந்தரின் தாயாரும், மாமாவும் வழக்கு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 9 நீதிபதிகள் அடங்கிய குழு வழக்கு தொடர்பில் விசாரணை செய்துள்ளது.

விசாரணையின் பின்னர் இருவரையும் இந்தியாவிற்கு திருப்பியனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது “கௌரவக் கொலை என்ற பெயரில் இளம் தம்பதியை கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.