Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

McGill University பல்கலைக்கழகத்தின் முக்கியஸ்தர் மரணம்

Monday 11th Sep 2017 03:42 AM

McGill University is the principal of the University

கிரெட்டா சேம்பர்ஸ், ஒரு பிரபல்யமான பத்திரிகையாளரும் மக்கில் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் வேந்தருமான இவர் தனது 90-வது வயதில் காலமானார்.

1991லிருந்து 1999வரை வேந்தராக பணியாற்றியதுடன் பள்ளியின் ஆளுநர்கள் குழுவிலும் அங்கம் வகித்தார் என மொன்றியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

1947ல் மக்கில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான இவர் பத்திரிகை ஆசிரியராக ஒரு நீண்டகாலம் பதவிவகித்ததுடன் 1960-ன் நடுப்பகுதியில் பல செய்தி ஊடகங்களின் அரசியல் விமர்சகராகவும் பணிபுரிந்துள்ளார்.

பிரெஞ் மொழி பேசும் கியுபெக்கின் பத்திரிதை துறையில் ஆர்வம் கொண்ட முதல் பெண் பத்திரிகையாளரென கியுபெக் அரசாங்க சேம்பரின் வாழ்க்கை வரலாற்றில் விபரிக்கப்பட்டுள்ளது.

கியுபெக் முதல்வர் இவரது மரணம் குறித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இவருக்கு 1993ல் கனடாவின் கௌரவ நிலைப்பாடுகளில் மிக உயர்வான கௌரவமாகிய Officer of the Order of Quebec ம், Order of Canada in 1994.ம் வழங்கப்பட்டது.

இவரை கௌரவப்படுத்தும் பொருட்டு கியுபெக் தனது நகர கொடியை ஞாயிற்றுகிழமைஅரைக்கம்பத்தில் பறக்க விட திட்டமிட்டுள்ளது.

சேம்பர்ஸ் தனது முழு வாழ்க்கையையும் பல்கலைக்கழகத்திற்கு செலவழித்தது மட்டுமன்றி சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்புக்களையும் செய்துள்ளார் என மக்கில் அதிபர் சுசானெ வோட்டியர் தெரிவித்துள்ளார்.