Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

இர்மாவின் சீற்றத்திற்கு முதலாவது வெளிநாட்டு சாட்சியமாக கனடிய விமான பணிக்குழுக்கள்!

Sunday 10th Sep 2017 03:44 AM

The first foreign testimony to Irma's outrage is the Canadian Air Force Task Force!

Wade Fleet வியாழக்கிழமை சென்.மார்ரின் விமான நிலையத்தை சென்றடைந்த சமயம் வானில் மேகம் சூழ்ந்திருந்தது.

சூறாவளி எர்மாவின் பேரழிவை அடுத்து பிரபல்யமான கரிபியன் ரிசார்ட் தீவை இவர் சென்றடைந்த சமயம் அப்பகுதி கொந்தளிபபு மிகுந்ததாகவும் பதட்டமாகவும் காணப்பட்டதாக தெரிவித்தார்.

தனது ரோந்து விமானத்தில் சென்றடைந்த இவர்-கனடியர்கள் பணிபுரியும் நியு பவுன்லாந்தை சேர்ந்த PAL Aerospace- -பணி புரிபவர்.

இவருடன் நியு பவுன்லாந் சார்ந்தPAL Aerospace-ஐ சேர்ந்த ஏழு கனடிய விமானிகளும் இரண்டு ஜெட் விமானங்களில் சென்றிருந்தனர். பேரழிவை காணச்சென்றவர்களில் முதல் கனடியர்கள் இவர்களாவர். இந்த அணிக்கு தலைமை தாங்கியவர் Fleet.

இவர்களது முதல் பணி உளவு துறை சார்ந்தது.

கண்ணிற்கெட்டிய தூரம் வரை குப்பைகள் தென்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. பெரும்பாலான கடைகள் அழிக்கப்பட்டிருந்தன எதுவித உணவும் இல்லை என கூறினர்.

மக்கள் தெரு வீதிகளில் காணப்பட்ட பொருட்களை அகற்ற முனைந்து கொண்டிருந்தனர்.

அனைவரும் நிவாரண உதவிகள் வழங்குவதில்-உணவு தண்ணீர் மற்றும் கூடாரம்-மற்றொரு புயல் மக்களை தாக்க முன்னர்-தீவிரமாக செயற்பட்டனர்.

பூமியில் மிகவும் பிரபல்யமான விமான நிலையங்களில் ஒன்றான சென். மார்ரென் விமான நிலையம் சூறாவளி இர்மாவால் அழிக்கப்பட்டது.