Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

லிபரல் கட்சிக்கான நியமனத் தேர்தலில் போட்டியிடும் பார்த்தி கந்தவேள்

Saturday 09th Sep 2017 18:52 PM

ஸ்காபுரோ

லிபரல் கட்சியின் ஸ்காபுரோ மத்திய தொகுதிக்கான லிபரல் கட்சிக்கான நியமனத் தேர்தலில் போட்டியிடும் பார்த்தி கந்தவேள்

ஸ்காபுரோ மத்திய (Scarborough Centre) மாகாண தொகுதிக்கான லிபரல் கட்சிக்கான நியமனத் தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை தமிழ் வேட்பாளரும் தற்போதைய ரொறன்ரோ கல்விச் சபை உறுப்பினருமான பார்த்தி கந்தவேள் வெளியிட்டுள்ளார். ஆசிரியர் மற்றும் கல்விச் சபை உறுப்பினர் என அறியப்பட்ட பார்த்தி கந்தவேல் இன்று இந்த முடிவை தனது முகநுாலின் ஊடாக அறிவித்துள்ளார்.

இந்தத் தொகுதியின் மாகாணசபை உறுப்பினரான அமைச்சர் Brad Duguid அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவினை நேற்று அறிவித்துள்ள நிலையில் இன்று பார்த்தி கந்தவேள் தனது முடிவை அறிவித்துள்ளார்.

இந்தத் தொகுதியில் ஏற்கனவே‌ கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளராக தமிழரான தேனுசா பரணி நியமனம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.