Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

மொன்றியலில் மற்றுமொரு தங்குமிட முகாம்

Wednesday 09th Aug 2017 07:06 AM

Another camping camp in Montreal

எல்லையை கடந்து கனடாவிற்குள் வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கென மொன்றியலில் மற்றுமொரு தங்குமிட முகாம் அதிகாரிகளினால் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திறக்கப்பட்ட குறித்த முகாமில் சுமார் 300 பேர்வரை தங்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இம்முகாமானது, சிறந்து ஒழுங்குகளுடன், தேவையான தளபாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது என நகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

குடியேற்றவாசிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களுக்கான தங்குமிட வசதிகளை செய்வதற்கு மேலும் இடவசதிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாளொன்றுக்கு சுமார் 250 பேர் முதல் 300 பேர் வரையானோர் கனேடிய எல்லையை வந்தடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க- கனேடிய எல்லையூடாக கியூபெக்கிற்குள் வரும் குடியேற்றவாசிகளை தங்க வைப்பதற்கென ஏற்கனவே, மொன்றியல் ஒலிம்பிக் அரங்கம் தங்குமிட முகாமாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.