Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

ஹமில்ட்டன் நீர்வீழ்ச்சிப் பகுதியில் சிக்குண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்

Wednesday 09th Aug 2017 06:58 AM

Five members of the same family who were hiding in the Hamilton Waterfalls

ஹமில்ட்டன் நீர்வீழ்ச்சிப் பகுதியில் சிக்குண்ட 15 பேர், அவசர மீட்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இரண்டு கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், முதற்கட்டமாக “செடோக் ஃபோல்ஸ்” பகுதியில் சிக்குண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டதாகவும் ஹமில்ட்டன் பிராந்திய தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நீரோட்டத்திற்கு நடுவே இருந்த ஒரு மேசை அளவேயான சிறிய பாறையின் மீது, குறித்த அந்த ஐந்து பேரும் தஞ்சமடைந்திருந்ததாகவும், பாதுகாப்பாக மீட்கப்பட்ட அவர்கள், மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பல மணி நேரங்களாகவே அவர்கள் அந்த பாறையில் தவித்துக்கொண்டிருக்க நேர்ந்ததாகவும், நீர் மட்டம் குறைவடையும் வரையில், அவர்களை அங்கிருந்து காப்பாற்ற முடியவில்லை எனவும் தீயணைப்பு படையினரும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல “அல்பியன் ஃபோல்ஸ்” பகுதியிலிருந்தும் 10 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் காயமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள், நீர் வீழ்ச்சிகளைப் பார்வையிடச் செல்வோர், தம்மைச் சுற்றியுள்ள நிலைமைகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக நீரோட்டத்தின் போக்கு குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

சடுதியான வானிலை மாற்றங்கள், நீரோட்டத்தின் போக்கிலும் எதிர்பாராத மாற்றங்களை மிக வேகமாக ஏற்படுத்திவிடும் எனவும், எனவே இவை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.