Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கட்டுரைகள்

வாழ்வு என்பது கற்றலே!......ஜீவா குமரன்

Wednesday 19th Apr 2017 15:26 PM

தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைகள் இலங்கை அரசியலில் எந்த மாற்றங்களை கொண்டுவரப்போவதில்லை.........

வாழ்வு என்பது கற்றலே!

தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைகள் இலங்கை அரசியலில் எந்த மாற்றங்களை கொண்டுவரப்போவதில்லை என்பதை கடந்த 30 வருடங்களாக அவதானித்த பின்பு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் இருந்து வாழ்க்கையில் கற்றுக் கொள்ளக் கூடிய பாடமாக எதனை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காகவே இந்தப் பதிவு.

அதிக கைகளும் பணபலமும் இருந்தால் எந்தக் கட்டுப்பாட்டையும் மீறலாம் என்ற நினைப்பிற்கு விழுந்த ஒரு அடிதான் இன்று நடந்திருப்பது.

கூட்டு என்பது எதற்கான கூட்டு என்பதனை ஆரம்பத்தில் இருந்தே வரையறை செய்யாதவரை அது என்றும் உடைந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

எமது சொந்த வாழ்வில் கூட எதற்காக கூட்டு வைக்கின்றோம் என்று ஓர தெளிவும் இல்லாது உருவாகும் கூட்டுகள் உடைந்து கொண்டு போவதை தினமும் கண்டு கொண்டே இருக்கின்றோம்.

ஆரம்பத்தில் இருந்தே கட்டுமானங்களை சமுதாய அங்கீரம் பெற்று மீறுவதும் அதுவே எல்லை கடக்கும் பொழுது ’கீயா.. மாயா..” என்று கதறுவதற்கு காரணம் நாங்களேதான்.

ஒவ்வொரு அதிகாரத்திற்கு மேலாக இன்னோர் அதிகாரமும்… அதனையும் தாண்டி தர்மம் என்ற ஒன்று என்றும் நிலைத்திருக்கும் என்பதனை நினைவில் கொள்ளவேண்டும்.

எல்லைகள் மீறும் பொழுது குருடனின் தடியும் குறிபார்த்து அடிக்கும்.

எனவே சமுதாயத்திற்கு வழிகாட்ட முன்வரும் எவரும் எதிர்வரும் காலங்களில் ஆவது பொய்மை என்ற அத்திவாரங்களின் மீது உங்கள் மாடிவீடுகளைக் கட்டாதீர்கள்.

அதிகமான ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு அமைப்பில் உள்ள சட்டதிட்டங்களில் உள்ள இறுக்கங்கள்தான் இந்த நாடுகளில் மனிதத்தன்மையை தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது.

வாழ்வு என்பது கற்றலே!

Image may contain: 4 people, text

Image may contain: 1 person

Image may contain: 1 person

e