Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கட்டுரைகள்

இந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும்

Wednesday 13th Sep 2017 21:12 PM

- நேரு குணரத்தினம் -

இந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும்

பாகம் 8: ஆடிக்கலவரத்தின் போது இந்தியர் என்று கதறியும் நையப்புடைக்கப்பட்ட ரோ அதிகாரி

- நேரு குணரத்தினம் -
(குறிப்பு: இத்தொடரின் பாகம் 1 - பாகம் 7ற்கு முன்னைய பதிவுகளைப் பார்க்கவும்)

எழுத வேண்டும் என்று நினைத்த வரலாற்றில் ஒரு பகுதியை கடந்திருக்கிறோம். முழுமையாக கடப்பதற்கு நீண்ட தூரம் சென்றாக வேண்டும்... சில விடயங்களை தெளிவுபடுத்தி நகர விரும்புகிறேன்... உளவுத்துறைகளை பற்றி எழுதுவதால் அவற்றின் மீது வெறுப்பும் அவற்றை கடந்தே அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும்... அது தீர்வாகாது அவர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் அதற்கேற்ப எவ்வாறு எங்கள் முன்னெடுப்புகள் அமைய வேண்டும் என்று சிந்திப்பதே தீர்வு.... அது இலகுவான காரியமு;ம் அல்ல அது குறித்து பின்னர் விரிவாக வருகின்றேன... மேலும் ஒரு விடயம் இயக்கங்கள் குறித்து எழுதும் போது அவ்வியக்கங்களில் இருந்தவர்கள் குறித்து காழ்புணர்வு கொள்ளாதீர்கள்... தங்கள் தாயக விடுதலையை நேசித்தே ஏதோ ஒரு இயக்கத்தில் தங்களை அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்... அவர்களின் தலைமை எப்படி பட்டது என்றோ அது ஒரு ஆளுமையான தலைமை என்றோ அவர்களுக்கு தெரியாது அத்தலைமைகள் விட்ட தவறிற்காக அவர்களை நொந்து கொள்வது தவறு...

சரி தொடர்ந்து பயணிப்போம்... இந்திய அணுமுறை குறித்தும் அதில் இருந்த குளறுபடிகள் குறித்தும் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம்.... அரசியல் நிகழ்வுகளாக நடந்துவிட்ட பல விடயங்களை பின்னர் பார்ப்போம்... அதற்கு முன்னர் சில சம்பவங்களுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்... 1986 யூலை ஆடிக்கலவரத்தின் 3வது ஆண்டு நினைவை முன்னிட்டு மாணவர் அமைப்பின் சார்பில் 500 சுவரொட்டிகளை அடித்து சென்னை எங்கும் ஒட்டினோம்... அதே போன்று 10000 துண்டுப்பிரசுரங்களையும் அச்சடித்து சென்னை எங்கும் விநியோகித்தோம். குறிப்பாக கல்லூரிகளில் மாணவர்களுக்கு விநியோகித்தோம்... திடீரென தேசத்தின் குரல் பாலா அண்ணா அழைத்தார். சென்று பார்த்தேன்... அங்கு தேசியத்தலைமையும் இருந்தார். பாலா அண்ணா என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டார்... நான் ஆடிக்கலவரத்தின் நினைவாக செய்யப்படும் விடயங்களை சொன்னேன்... அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த தேசியத்தலைமை அதற்கு அவ்வளவும் போதும் என்று நினைக்கிறேன் என்றார்.... சரிடாப்பா அப்ப இதோடைவிட்டிட்டு மிச்ச வேலையை பாருங்கடா என்றார் பாலா அண்ணா...

இரண்டு ஆண்டுகள் மாணவர் செயற்பாடுகளில் அது எனக்கு புது அனுபவமாக இருந்தது. ஏதோ சிக்கல் என்று புரிந்தது. அதை வெளிப்படையாக பேச இருவரும் தயங்குகிறார்களோ என்றும் பட்டது. சரி என்று வந்துவிட்டேன்... பின்னர் ஒரு நாளில் புளொட் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் என்னுடன் பாடசாலையில் படித்தவர் பேச என்று வந்தார். என்ன என்று கேட்டேன்... மரினாவில் அனைத்து இயக்கங்களும் கறுப்பு யூலைக்காக உண்ணா நோன்பிருக்கப் போவதாகவும் இந்திய தலையீட்டை வலியுறுத்தப் போவதாகவும் அதற்கு மாணவர் அமைப்பும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்... ஏற்கனவே புளொட் அமைப்பின் ஒரு செயற்பாட்டால் கடும் கடுப்பில் இருந்த நான் மேற்கொண்டு எதுவும் வேண்டாம் என பாலா அண்ணாவும் வேண்டியதால் நாம் வரமுடியாது என்றுவிட்டேன்...

என்ன கடுப்பு என்று தானே கேட்கவேண்டும் போலிருக்கிறது... 1986 யூன் மாதத்தில் ஈரோஸ் அமைப்பின் மாணவர் பிரிவான கைஸ் ஒரு சர்வதேச மாணவர் மாநாட்டை சென்னiயில் நடாத்தினார்கள். எழு நாட்கள் நடைபெற்ற இம்மகாநாட்டில் இயக்க முக்கியஸ்தர்களுக்கான ஒரு பகுதியில் கலந்து கொள்ள பாலா அண்ணாவிற்கு நேரடியாக சந்தித்து ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமாரன் அழைப்பு விடுத்திருந்தார். இங்கிலாந்தில் ஆரம்பித்து நகர்ந்த ஈரோஸ் அமைப்பு பல சர்வதேச தொடர்புகளை அப்போது கொண்டிருந்தது. காத்மண்டுவில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் தாங்களும் கலந்து கொண்டுவிட்டு அதில் கலந்து கொண்ட 18 நாட்டு மாணவர்களையும் சென்னையில் தாங்கள் நடாத்திய மகாநாட்டில் கலந்து கொள்ள அழைத்து வந்திருந்தனர்.

ஆங்;கிலத்தில் நடைபெற்ற அம்மகாநாட்டில் கலந்து கொள்ள முடியுமா என பாலா அண்ணா கேட்டார். கலந்து கொள்கிறேன் என நானும் கலந்து கொண்டேன்... அந்நாட்களில் பாலகுமாரன் அண்ணாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் பல ஏற்பட்டன. அக்காலப்பகுதிக்கு சற்று முன்னரே ரெலோ அமைப்பிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் மோதல் ஏற்பட்டு அதில் சிறீசபாரத்தினம் மற்றும் பொபி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் புலிகள் முறுகல்நிலை அதிகரித்திருந்தது. இந்நிலையிலேயே இம்மகாநாடு நடைபெற்றது. ஈரோசில் இருந்து பிரிந்து உருவான இயக்கம் ஆதலால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இம்மகாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஏனைய இயக்கங்கள் அனைத்தும் கலந்து கொண்டிருந்தன. கலந்து கொண்டவர்கள் தமிழர் போராட்டம் குறித்த வெளியீடுகளைக் கேட்டபோது அது பெருமளவில் ஈரோசிடம் இருக்கவில்லை... அப்போது பெருவாரியான வெளியீடுகளை ஆங்கிலம் உட்பட புலிகள் அமைப்பே வெளியிட்டிருந்தது. ஆகவே நான் பாலா அண்ணாவிடம் பேச அவரும் அவற்றை அனுப்பி உதவினார். அவற்றை நாம் காட்சிப்படுத்தியபோது புளொட் அமைப்பினர் தாமும் சில பிரசுரங்களைக் கொண்டுவந்து போட்டிக்கு காட்சிப்படுத்தினர். எமது தரப்பு நியாயங்கள் மற்றையவர்களை சென்றடைவது தான் முக்கியம் எம்மிடையே போட்டி போல் எதுவும் வேண்டாம் என்றேன் அவர்கள் கேட்கவில்லை.

புளொட் சார்பில் லண்டனில் இருந்து வந்திருந்த ஒரு உறவை ஆங்கிலம் பேசுவதற்காக அழைத்து வந்திருந்தார்கள். நான்காம் நாள் தமிழீழ மாணவர்கள் ஏனைய சர்வதேச மாணவர்களுடனான கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் நானும் தமிழீழ மாணவர்கள் சார்பில் கலந்து கொண்டேன். அப்படத்தையே இங்கு காண்கின்றீர்கள். சர்வதேச மாணவர்களின் முக்கிய கேள்வியாக அமைந்தது. ஒரே நோக்கத்தி;ற்காக போராடும் அமைப்புக்கள் ஏன் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக நடந்து கொள்கின்றன? குறைந்தபட்சம் மாணவர்களுக்கு இடையிலாவது ஒருமைப்பாடு நிலவமுடியாதா என்றனர்? அதற்கு பதிலலித்த நான் ஓற்றுமை முக்கியம் என்றும் அதன் அவசியத்தை நாம் முழுமையாக உணர்ந்துள்ளதாகவும் ஏனையவர்களின் நோக்கங்களை புரிந்து கொண்டு அதற்கு பலியாகாது நாம் செயற்பட்டால் அது சாத்தியம் என்றேன். தமிழர் விடுதலை இயக்கங்கள் ஒன்றுபட்டால் அது ஆபத்து என்று உணர்ந்து சிலர் செயற்படுகின்றனர். அது குறித்து நாம் விழிப்பாக இருக்கவேண்டும் என்றேன்.

அடுத்து அதற்கு பதிலலித்த புளொட் அமைப்பின் மாணவப்பிரதிநிதி நாங்கள் எங்களைத் தவிர்ந்த ஏனைய எந்தவொரு தமிழ் அமைப்பையும் விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கவில்லை எனவே ஒற்றுமை ஒருமித்த செயற்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்;; எனக்கு அப்பதில் தூக்கிவாரிப்போட்டது. சர்வதேச மாணவர்கள் நோ என தம் தலையை அசைத்துக் கொண்டனர். அவரே தம் நிலைப்பாட்டில் கிறுங்குப்பிடியாக நின்றார்;. இந்நிலையிலேயே அமைப்புக்களின் தலைவர்களின் கேள்வி நேரம் ஜந்தாம் நாள் நடைபெற்றது.

அதில் கலந்து கொள்வதாக இருந்த பாலா அண்ணா பாதுகாப்பு கருதியும் மகாநாட்டில் ஏற்பட்ட ஏனைய சில சிக்கல்களினாலும் இறுதியில் கலந்து கொள்ளவில்லை. ஆதலினால் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து லோரன்ஸ் திலகர் மற்றும் யோகி ஆகியோரும் ஈரோஸ் சார்பில் பாலகுமாரனும் ரெலோ சார்பில் சிறீகாந்தா மற்றும் செல்வம் அடைக்கலநாதனும் புளொட் சார்பில் உமா மகேஸ்வரனும் கலந்து கொண்டனர். அங்கும் இதே நிலைப்பாட்டையே உமா மகேஸ்வரனும் வெளிப்படுத்தினார். இந்நிலையிலேயே தற்போது புளொட் அமைப்பு சேர்ந்து செய்வோம் என அழைப்பு விடுத்து வந்திருந்தது. எனக்கிருந்த கடுப்பில் வந்த உறவை நான் வறுத்தெடுத்து விட்டேன். பாவம் அவருக்கு அன்று நடந்த ஒன்றும் தெரியாது... அன்று ஒருவரும் வேண்டாம் என்றீர்கள் இன்று மட்டும் வேண்டுமா என்றேன்... ஆட்களை திரட்டுவதானால மாணவர் அமைப்பு வேண்டும் என்று அப்போது அனைவருக்கும் தெரியும்... கடினமாக முயன்று பார்த்தார் பின்னர் சரிவராது என்று தெரிந்தபின் போய்விட்டார்.

அவர்களின் போராட்ட நாளும் வந்தது போய்ப் பார்த்தோம். புளொட் ஈரோஸ் ரெலோ ஈ.பி.ஆh.எல்.எவ் உடன் கூட்டணியினரும் இருந்தனர். இக்கூட்டு சற்று புதிதாக இருந்தது. கறுப்பு யூலை நிகழ்வு நாட்கழித்து செப்டம்பரில் நடைபெறுகிறது... இந்திய தலையீடு வலியுறுத்தப்படுகிறது... கூட்டிக்கழித்தபோது பின்புலம் புரிந்தது. ஒரு 300 பேர் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் இருந்தனர். வெறும் 24 மணிநேர அறிவித்தலிலேயே 2000பேரை கூட்டும் எமக்கு நாம் செய்யவில்லையே என்ற கடுப்பு வேறு.... இந்நிலையிலேயே அமெரிக்கா சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்கப்போவதான செய்தி வெளியானது. நமது தமிழக மாணவ உறவுகளும் அதற்கு எதிராக சென்னையில் அமைந்திருந்த அமெரிக்க துணை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டும் என்றனர். சரி என அதற்கான ஒழுங்குகளை செய்தோம்...

பொலிசாருக்கு முன்கூட்டியே அறவித்து அனுமதி பெறாமல் சடுதியாக செய்ய வேண்டும் என்றனர். சென்னையின் மையத்தில் அண்ணாசாலை மேம்பாலத்திற்கு முன்பாக கடும் பாதுகாப்புகளுடன் தூதரலாயலம் அமைந்துள்ளது.

முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சுலேக அட்டைகளை 10 10 ஆக சுருட்டிக்கட்டி மாணவர்களை 10 பேராக பிரித்து ஒவ்வொரு பஸ் தரிப்பு நிலையத்திலும் எவ்வித அசமாத்தமும் இன்றி ஒருங்கமைத்தோம். அனைவரும் ஒருங்கமைந்தவுடன் சடுதியாக அனைத்துத்திசைகளிலும் இருந்து முன்னேறி அமெரிக்க தூதராலயத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். எமது மாணவர் ஊடகப்பிரிவு ஊடகவியலாளர்களாக மாறி விரைவில் அதனை படம்பிடித்துக் கொண்டது... அப்போது தான் இன்னொரு விடயமும் எமக்குத் தெரிந்தது. கொலம்பஸ் நாளுக்காக அன்று அமெரிக்க தூதராலயத்தில் விடுமுறை... பாதுகாப்பு கூடிய பகுதி அது ஆதலால் குறுகிய நேரத்தில் பொலீசாரும் வந்து குவிந்தனர். பரந்து விரிந்து நின்ற மாணவர்களை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி சுருக்கினர்.

புலனாய்வுத்துறையினரும் சுற்றி வளைப்பார்கள் என்பதால் நான் அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டேன். அப்போது தான் மன்னார் தளபதி லெப். கேணல் விக்டரின் வீரமரணச் செய்தி கிடைத்தது. அது சற்று மனச்சோர்வை ஏற்படுத்த போராட்டத்தில் இருந்த உறவுகள் என்ன செய்வது என்று கேட்டார்கள். கலைந்து வாருங்கள் என்றேன்... இல்லை கைதாகியே விடுதலையாவோம் என்றார்கள்... சரி விருப்பப்படி செய்யுங்கள் என்றுவிட்டு மாலை செய்தித்தாள்களுக்கும் மறுநாள் நாளிதழ்களுக்கும் ஊடகஅறிக்கையை தயார் செய்து படங்களை பிரின்ட் செய்து இணைத்து அவற்றின் அலுவலகங்களுக்கு அனுப்பிவிட்டு மாணவர் விடுதிக்கு சென்று தூங்கிவிட்டேன்...

காலை எழுந்து குளித்துவிட்டு எனது அறைக்கு திரும்பினால் எனது அறைக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டிருந்தார். யாரோ மாணவரைத் தேடி அவரின் தந்தையார் வந்திருகிறார் என்று நினைத்து யாரை தேடுகிறீர்கள் சார் என்றேன்... நேருவை பார்க்கவேண்டும் என்றார்... எனக்கு புதினமான இருந்தது... தமிழகத்திலும் என்னைத்தேடி ஒருவரா? ஆவலுடன் நான் தான் நேரு சார்... நீங்கள் யார் என்றேன்... நான் நடராஜன் சிபிஜ என் தன் பட்ஜை காட்டினார்... அதாவது இந்திய உள்ளக உளவுத்துறை.. இதுவரை சென்னை உளவுத்துறையையே சந்தித்திருந்த எனக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியான சந்திப்புத் தான்... பேசலாமா என்றார்... காலை உணவிற்காக மாணவர்கள் விடுதியெங்கும் நடமாடும் நேரம் எனவே வாருங்கள் என அறைக்குள் அழைத்து கதவை சாத்திவிட்டேன்.... என்ன விடயம் சார் காலை உணவிற்கு செல்ல வேண்டும் என்றேன்... அவரும் விடயத்திற்கு நேரடியாக வந்தார். ஏன் மரினா போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார். சுவரொட்டி அடித்தோம் துண்டுப்பிரசுரம் வெளியிட்டோம் அதற்கு மேல் எதுவும் செய்யும் திட்டம் இல்லை இருக்க அப்போது மாணவர்களுக்கு சோதனை வேறு அதனால் மரினா போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றேன்...

நேற்று அமெரிக்க தூதரலாயத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தினீர்கள் போலும் என்றார்... அப்டியா சார் நேற்று போராட்டம் நடந்ததா? எதற்கு சார் என்றேன் அப்பாவியாக... அப்போது தான் பார்த்தேன் ஊடக அறிக்கையும் படங்களும் என் மேசைமேல் இருப்பதை... என் தவிப்பு அதை அவர் பாத்துவிடக்கூடாது.... உடனே என் அருகில் இருந்த இந்து ஆங்கில நாளிதழை விரித்து இதில் எதுவும் வரவில்லையே என்றேன்... இதில் வரவில்லை ஆனால் ஏனைய தமிழ் நாளிதழ்களில் வந்துள்ளது என்றார்... அப்படியா என்றவாறு பேப்பரை மடித்து ஊடகஅறிக்கை படங்களின் மேல்போட்டபின் தான் என் உள்பதட்டம் குறைந்தது. எங்களை எதிர்த்து எதுவும் செய்துவிட முடியுமா என்றார். ஏன் சார் உங்களை நாம் எதிர்க்க வேண்டும் நீங்கள் எங்கள் நேசசக்தியல்லவா என்றேன்... அவர் எவ்வித ஒளிவு மறைவுமின்றி நேரடியாகவே சொன்னார் நீங்கள் ஈழம் எடுக்க நாங்கள் விடுவோம் என்று நினைக்கிறீர்களா என்றார்? அப்ப ஏன் சார் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கின்றீர்கள் என்றேன்... அதுவேறு ... இலங்கைத்தீவிற்குள் தான் உங்களுக்கு தீர்வு என்றார்... அது தான் உங்கள் நிலைப்பாடென்றால் அதை வெளிப்படையாக தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டியது தானே! ஏன் ஒளிக்கின்றீர்கள் என்றேன்... தமிழக மாணவர்களுக்கு நீங்கள் சொல்லியதாக இதை சொல்லட்டா என்றேன்... அவர் அதற்கு பதில் சொல்லவில்லை... சரி நீங்கள் சாப்பிட போகவேண்டும் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்றுவிட்டு அவர் போய்விட்டார்....

இப்போது நிலைமை சற்று தீவிரமடைவது போல் எனக்குப்பட்டது... எனக்குள் பல கேள்விகள் எழுந்தன... பதில் பெறக்கூடியவர் ஒருவர் தான் அன்று மாலையே பாலா அண்ணாவை சந்தித்தேன்... நடந்தவற்றை சொல்லி ஏன் அண்ணா அன்று மேற்கொண்டு எதுவும் செய்யவேண்டாம் என கேட்டுக் கொண்டீர்கள் என்றேன்... கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு ஒண்டும் பயப்பட மாட்டாய் தானே... எங்களை சிக்கலில் மாட்டுவதற்கு சதிவலைகள் பல சுற்றிப்பின்னப்படுகின்றன... மாணவர்களினூடாக புகுவதற்கு திட்டமிடுகிறார்கள்... அவர்களின் முதற்குறி நீ... கொஞ்சம் அவதானமாக இரு... சுற்றி இருப்பவர்கள் மீது ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்... சில சம்பவங்களையும் சொன்னார்... அபடபோது தான் புரிந்தது எங்களுக்குள்ளும் ஊடுருவல் இருக்கிறது... உன் கதவுவரை தட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள் எனவே கவனம் அதிகம் என்றார்... இப்போது நான் சந்தேசக்பட்ட பல விடங்களுக்கான ஒரு முழுமையான புரிந்துணர்வு ஏற்பட்டதில் மகிழ்ச்சியே... ஆனாலட அன்று அதை மாணவர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளவேயில்லை... பலர் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என்பதால்....

அனைவரையும் ஒன்றுதிரட்டி புலிகளை எதிர்கொள்ள இந்தியா தயாராகிவிட்டதே துருவங்களாக நின்றவர்கள் மரினாவில் இணைந்த காட்சி என்பதும் புலப்பட்டது... இந்நிலையில் அவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்ததே அதன்பின்னர் நடந்த கைதும் அதன் போது நடாத்தப்பட்ட் அவமானங்களும்....

சரி இந்திய உளவுத்துறையின் வரலாறும் அதன் சிறீலங்கா மீதான ஆதிக்கம் குறித்தும் சற்று பார்ப்போம்... நீண்டகாலமாக இந்திய உளவுத்துறை நிறுவனமாக இன்டலிஜன் பீரோ எனப்படும் சுருக்கத்தில் ஜபியே இயங்கி வந்தது. அதன் அலுவலகர்கர்கள் சிறீலங்காவிலும் நிலை கொண்டிருந்தனர். பின்னர் பாக்கிஸ்தானுடனான முறுகல் நிலை அதிகரிக்கவும் சிக்கிய தீவிரவாதிகளுக்கும் கஸ்மீர் தீவிரவாதிகளுக்கும் ஆதரவளித்து இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க பாக்கிஸ்தான் முனைய அதை எதிர்கொள்ளவென 68இல் உருவானதே ரோ எனப்படும் வெளியக உளவுத்துறைப்பிரிவு... பின்னர் 71இல் பங்களாதேஸ் பிரிவின் போது பாக்கிஸ்தான் விமானங்கள் கொழும்பு கட்டுநாயக்காவில் எரிபொருள் நிரப்பி சென்றமையும் அமெரிக்கா தன் போர் கப்பல்களை இந்துமகா சமுத்திரத்திற்கு நகர்தியமையும் சிறீலங்கா குறித்த இந்தியாவின் கரிசனையை அதிகதித்து விட்டது....

கொழும்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவையும் இந்திய எதிர்ப்பு சக்திகள் கொழும்பை தங்கள் துரும்புச்சீட்டாக பயன்படுத்தாது பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பையும் ரோ தனது சிறீலங்கா செயற்பாட்டில் கொண்டிருந்தது. 77இல் பதவியேற்ற ஜெயவர்த்தனா அரசு அமெரிக்காவுடன் நெருங்கிச் செல்ல ரோ செயற்பாடுகள் சிறீலங்காவில் தீவிரப்படுத்தப்பட்டன.

இவ்வாறு விரிவாக்கம் கண்ட சிறீலங்காவிலான ரோ செயற்பாடுகளின் தலைமை அதிகாரியாக ஆடிக்கலவரம் நடைபெற்ற 83 யூலையில் இருந்தவர் மத்தியூ எபிரகாம்... ஆம் மலையாள இனத்தவர் தான்... யூலை 25ஆம் நாள் அப்;போது கொழும்பு கோட்டையில் அமைந்திருந்த தன் அலுவலகத்திற்கு காலி வீதியால் போய் கொண்டிருந்த போது சிங்கள் காடையர்கள் இவர் வாகனத்தையும் தாக்கினார்கள்... இவரது காரில் இருந்து வெளியே இழுத்துப்போட்டு வாகனத்தை பிரட்டி அதற்கு தீ மூட்டினர். தமிழர் என் நினைத்து இவர் மீது தாக்குதலை மேற்கொள்ள நான் இந்தியர் என மத்தியூ கத்தினார். இந்தியர் என்று சொன்னால் தாக்கமாட்டார்கள் என்று நினைக்க அப்போது தான் தாக்குதல் அதிகரித்தது. இதனால் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளானார். அது குறித்த அறிக்கை டெல்கிக்கு அனுப்பப்பட யூலை கலவரத்தின் பின் நடைபெற்ற அதியுயர் பாதுகாப்பு மகாநாட்டில் ரோ தலைமை அதிகாரி கிரஸ் சந்திரா சக்சேனா பிரதமர் இந்திரா காந்தியிடம் தமிழகம் குறித்த அறிக்கையுடன் சமர்ப்பித்தார்... தனது புதிய அணிசேர்பான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்த இந்திரா அம்மையார் என்ன முடிவுகளை எடுத்தார்... அதில் எவ்வாறு எம்.ஜி.ஆரை இணங்க வைத்தார் என்பது குறித்து வரும் வெள்ளி பார்ப்போம்...