Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கட்டுரைகள்

சத்துருக்கொண்டான் படுகொலைகள் நடந்து 27 வருடங்கள்

Saturday 09th Sep 2017 18:33 PM

Stanislaus Celestine

 

இராணுவமும்,முஸ்லிம் ஊர்காவல் படை இணைந்து அங்கவீனமான பராயமடையாத சிறுவர்கள், சிறுவர்கள்,பெண்கள்,முதியவர்கள் என ஈவு, இரக்கமின்றி வெட்டியும், எரித்தும் கொன்ற சத்துருக்கொண்டான் படுகொலை தினம் இன்று.

சத்துருக்கொண்டான் படுகொலை 1990 செப்டம்பர் 9 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த 184 இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும்.இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும், எவரும் கைது செய்யப்படவில்லை.

இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

சத்துருக்கொண்டான் கிராமம் மட்டக்களப்பு நகருக்கு அருகே அமைந்துள்ளது. 1990 செப்டம்பர் 9 மாலை 5:30 மணியளவில், சீருடை அணிந்த இராணுவத்தினரும், மற்றும் சில ஆண்களும் கிராமத்தினுள் நுழைந்து கிராம மக்கள் அனைவரையும் வீதியில் கூடுமாறு பணித்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள அனைவரும் விடுவிக்கப்படுவர் என அவர்கள் உறுதியளிக்கப்பட்டனர்.

இத்தாக்குதலில் உயிர் தப்பியதாகக் கருதப்படும் ஒரேயொருவர் கந்தசாமி கிருஷ்ணகுமார். இவர் பின்னர் கொடுத்த சாட்சியத்தில்:

ஐம்பது கொமாண்டோக்கள் தம்மில் 150 பேரை சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றனர். தாம் அங்கு செல்லும் போது மாலை 7.00 அல்லது 8.00 மணியிருக்கலாம். இவர்களில் இருந்து பிரிக்கப்பட்ட நான்கு பேர் கத்திகளாலும், வாள்களாலும் தாக்கப்பட்டு முகாமிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனர். மீதமிருந்த அனைவரும் டயர்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டனர்.

காயமடைந்த கிருஷ்ணகுமார் இருட்டில் மறைந்து ஒருவாறு தப்பி வெளியேறினார். மொத்தம் 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.