Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கட்டுரைகள்

ஈ பி டி பி யின் உதிர்ந்த மயிர்கள் மகிந்தவிடம் சரணாகதி.

Thursday 07th Sep 2017 22:06 PM

மஹிந்தவுக்கு நன்கு தெரியும்.

ஈ பி டி பி யின் உதிர்ந்த மயிர்கள் மகிந்தவிடம் சரணாகதி.

சிலருக்கு பதவி சுமையாக இருக்கும் ஆனால் சிலருக்கு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்காவிட்டால் நிதிதிரையே வராது என்பதும் உண்மையே. .அப்படிப்பட்ட ஒன்று தான் இன்று தமிழ் மக்கள் மத்தியில் திடீர் திடீர் என முளைக்கும் கட்சிளும் கட்சி விட்டு துரத்தப்பட்ட கையாலாக கூட்டங்களுமாகும்.

ஈ.பி.டி.பி கட்சியின் மூலம் தமது சுகபோகங்களை மெருகூட்டிக்கொண்ட பின் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முதுகில் குத்தியவர்கள் பலபேர். இத்தகையவர்கள் தமது பதவிகள் பறிக்கப்பட்டமையால் நித்திரை கொள்ளமுடியாது பல இரவுகள் விழித்திருந்து தென்னிலங்கைக்கு ஓடிச்சென்று யாழ்ப்பாணத்து மக்களின் வாக்கு நாயகர்கள் தாம் தான் என பச்சைப் பொய் சொல்லி பதவிப் பிச்சை பெற்றுக்கொள்ள முண்டியடித்துவருகின்றனர்.

அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று தற்போதும் நடைபெற்றுள்ளது. அதாவது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது இலங்கையின் இதர பல மாவட்டங்களிலும் செல்வாக்கு மிக்கதாக விளங்கும் தமிழ்க் கட்சி ஈ.பி.டி.பி.

அக்கட்சியில் சவாரி செய்து கட்சியின் வருவாய்களைக் கொள்ளையிட்டவர்கள், நிர்வாக பொறுப்புகள் செய்யத்தெரியாது கொடுக்கப்பட்ட பொறுப்புக்களையும் நிறுவனங்களையும் குட்டிச் சுவராக்கியவர்கள், கூட இருந்து குழி பறித்து தமது சுயநலங்களை பெற்றுக்கொண்டவர்கள், கட்சி நிதிகளை கொள்ளையிட்டு தப்பியோடியவர்கள் என ஈ.பி.டி.பியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்ப்பட்டமையால் கட்சியில் இருந்து துரத்தப்பட்ட எல்லா கள்ளர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து யாழ்ப்பாணத்தில் தாம் மீண்டும் சுருட்டுவதற்கு பதவிகளையும் அதனை கொண்டு நடத்த பல இலட்சங்களையும் தரும்படி காத்திருந்து சந்தித்துக் கையேந்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து ஆசி பெற்றவர்கள் இவர்களில் எவரும் தமக்கான வாக்கு பலத்தை கொண்டவர்கள் அல்லர். ஈ.பி.டி.பி கட்சியினதும் அதன் தலைவரினதும் வாக்குகளை தமக்கு சாதகமாக்கி சுகம் கண்டவர்கள் தான் இதில் சென்ற வங்குறோத்து கூட்டம் என தெரிவிக்கப்படுகிறது..

அதுமட்டுமல்லாது இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாதனை படைத்த பத்திரிகை ஒன்றை மூடி சாதனை படைத்தபின் தொலைக்காட்சி நிறுவனத்தையும் தனது பதவிக்காக பயன்படுத்த முயன்று இது தலைமைக்குத் தெரியவர தலைமறைவாகி இப்போது தனக்கு பதவி இல்லை என்றால் தற்கொலை செய்துவிடுவேன் என்று சொல்லி மஹிந்தவின் கோவணத்தை கழட்டி நுகர்ந்துபார்க்க சென்ற கூட்டத்துடன் சென்று வரிசையில் நின்று தரிசனம் பெற்றுள்ளனர்.

அனாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியால் சூடுகண்டவர் மஹிந்த ராஜபக்‌ஷ. மக்கள் செல்வாக்கும் இல்லாத நிரந்தர கொள்கைப் பற்றும் இல்லாத சொந்தப் புத்தியும் சுய நினைவும் இல்லாத மரம் விட்டு மரம் தாவும் குரங்குகளை விட கேவலமான கூட்டத்தை தன்னுடன் சேர்த்து யாழ்ப்பாணத்தில் தனக்குள்ள எதிர்ப்பலைகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள மண்டையில் ஒன்றும் இல்லாத மாங்காய் மடையனா மஹிந்த ராஜபக்‌ஷ?

யாழ்ப்பாணத்தில் டக்ளஸின் மக்கள் பலத்தில் அவரது நிழலில் உண்ணிகளாக இருந்து உறுஞ்சி குடித்துவிட்டு தாம் செய்த குற்றங்களுக்காக கட்சியினது நடவடிக்கைக்கு அஞ்சி ஓடி ஒளித்தவர்களும் துரத்தப்பட்டவர்களும் இன்று தமக்குத்தான் யாழ்ப்பாணத்தில் மக்கள் பலம் இருக்கெண்டு சொல்லி மஹிந்தவிடம் பதவி கேட்டு கையேந்தியிருப்பதானது மக்கள் சேவைக்கானதாக இல்லாது தமது வயிற்றுப் பிழைப்புக்கானதாகவே அமைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

டக்ளசுக்கு குழிபறித்து அவரது கௌரவத்தை மட்டுமல்லாது கட்சியின் அதிகரித்த வெற்றிக்கான சந்தர்ப்பங்களையும் தடுத்த கூட்டம் தான் இவர்கள் என்று மஹிந்தவுக்கு நன்கு தெரியும்.

இத்தகைய வங்குறோத்துக்களுக்கு பதவி கொடுத்து மறுபடியும் தனக்கி ருக்கும் ஒரு சில ஆதரவையும் யாழ்ப்பாணத்தில் இருந்து அழித்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கப்போவதில்லை?

ஆக, பதவி சுகத்துக்காக சாகும்வரை மக்கள் செல்வாக்கின்றி திரியும் இவர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இன்னொருவரது பலத்தில் இருந்து சவாரி செய்து வாழும் வங்குறோத்துக்கள் மஹிந்தவை தாங்கள் சொல்வதை எல்லாம் நம்பும் மாங்காய் மடையனென்று நினைத்துவிட்டனர் என்றே எண்ணத்தோன்றுகின்றது.