Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கட்டுரைகள்

ஈழவிடுதலை வெறும் உணர்ச்சி மயமானதல்ல அது அறிவுபூர்வமானது..

Thursday 07th Sep 2017 03:32 AM

ஈழத்தமிழர் பிரச்சனை

இந்திய உளவுத்துறையும் ஈழவிடுதலையும்

 டக்லஸ் தேவானந்தாவின் தலையில் துவக்கு வைக்கப்பட விடுவிக்கப்பட்ட அலன் தம்பதிகள்

- நேரு குணரத்தினம் -
 

கடந்த பாகத்தில் இந்திரா காந்தி அம்மையாரில் இருந்து ராஜீவ் காந்தி காலத்தில் ஈழத்தமிழர் விவகாரத்திலான இந்தியாவின் அணுகுமுறை மாற ஆரம்பித்தது என்று தெரிவித்திருந்தேன். அது குறித்து விரிவாக இந்தப் பாகத்தில் பார்ப்போம். முதலில் ஒரு விடயம் இத் தொடரில் ஒரு விடயத்தை அவதானித்திருப்பீர்கள் இவ்விடயத்தை உணர்வு ரீதியாக உணர்ச்சி வசப்பட்ட விடயமாக நான் அணுகமுயலவில்லை. ஈழத்தமிழரின் இனப்பிரச்சனையை அறிவுபூர்வமாக அணுகி அலசும் ஒரு களமாகவே இதை நகர்த்தி வருகின்றேன். அதேபோன்று விடுதலைப்புலிகளுக்கான எனது ஆதரவும் வெறும் உணர்ச்சி மயமானதல்ல அது அறிவுபூர்வமானது... இந்தப் புரிதல் பல மட்டங்களில் இல்லாதிருப்பதே ஈழத்தமிழினத்தின் சாபக்கேடு.... அதற்காவ பிரதான காரணம் தேடுதலின்மையே....

சரி விடயத்திற்கு வருவோம்... இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் ஜெயவர்தனாவிற்கு அழுத்தம் கொடுக்கும் துரும்புச்சீட்டுக்களாகவே தமிழ் ஆயுதக்ககுழுக்கள் வளர்க்கப்பட்டன எனத் தெரிவித்திருந்தேன்... அதேவேளை மிதவாதத் தலைமை கூட்டணியினரும் மறுபக்கத்தில் ஆசை காட்டியே வைக்கப்பட்ட்னர். அமிர்தலிங்கம் தலைமையிலான அவர்களிடம்.... நீங்கள் தான் முக்கியமானவர்கள் ஆயுததாரிகளை அழுத்தம் செலுத்த மட்டும் தான் பயன்படுத்துகின்றோம்.... சமாதான தீர்வொன்று எட்டப்பட்ட்தன் பின் நீஙகள் தான போய் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் எனவே ஆயுதக் குழுக்களைப்பற்றி சட்டை செய்யாது உங்கள் பணியில் கரிசனையாக இருங்கள் என அவர்கள் உசுப்பேற்றப்பட்டனர்.

மறுபுறத்தில் கூட்டணியினரை சும்மா அரசியல் பேச அனுமதித்திருக்கிறோம்.... அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்... உங்கள் போராட்டத்தால் ஈழம் அமையும் நாங்கள் இருக்கிறோம் என ஆயுதக்குழுக்கள் உசுப்பேற்றப்பட்டன. அமிர்தலிங்கம் ஆரம்பத்தில் இவர்கள் கூற்றை நிறையவே நம்பினார். கூட்டண்யின் தொடர்பாளனாக அக்காலப்பகுதியில் இருந்தவன் என்ற ரீதியில் கூட்டணித்தலைவர் சிவசிதம்பரம் இது குறித்து பலமுறை என்னிடம் பிரஸ்தாபித்துள்ளார். நாங்கள் தான் ஆட்சி நாங்கள் தான் ஆட்சி என அமிர் அடித்துக்கூறுவதாக பலமுறை சொல்லியிருக்கிறாhர். இதை நம்பியே அமிர் புலிகளை வெளிப்படையகவே பகைத்துக் கொண்டார். புலிகளின் அர்ப்பணிப்பை உதாசீனம் செய்தார். அல்லது ஏளனம் செய்தார். இது புலிகள் அமிர் முறுகல் நிலையை வளர்த்தது. அக்காலப்பகுதியில் வெளிநாட்டுப்பயணங்களின் போது போராட்டத்திற்கென அளித்த பணங்களை குறிப்பாக மலேசியாவில் புலிகளுக்கென வழங்கப்பட்ட 6 லட்சம் வெள்ளி பணம் என பலவிடயங்களில் இருதரப்பு முறுகல்நிலை வளர்ந்தது. அனைத்திற்கும் காரணம். மேற்கண்ட இந்திய அணுகுமுறையே....

அதேவேளை ஆயுதக்குழுக்கள் கட்டை மீறிச்சென்று விடக்கூடாது என்பதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட் ஆயுதக்குழுக்கள் சமகாலத்தில் வளர்க்கப்பட்டன. ஒன்று மீறினால் மற்றையதை வைத்து அதை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதே அதன் நோக்கம். அதை முதலில் முழுமையாக புரிந்து கொண்டவர்கள் புலிகளே.... அதனால் தான் 1985 ஏப்ரல் மாதத்தில் ஈழ தேசிய விடுதலை முன்னணி என புளொட் நீங்கலாக அமைந்த நான்கு அமைப்புகள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர். அதன் தொடச்சியாக 1985 ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த அவர்களின் விடுதலைப்புலிகள் இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு தெரிவித்திருந்தனர்....

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின்நிலைப்பாடு எத்தகைய முக்கியத்துவம்வாய்ந்தது என்பதை நாம்அடித்துக்கூறத்தேவையில்லை. இந்தியாதென் ஆசியக்கண்டத்தில் பலம் பொருந்தியவல்லரசு. இந்தியாவின் பூகோள அரசியல்கேந்திர வியூகத்துக்குள் எமது தாயக பூமி அமையப் பெற்றிருக்கிறது. இந்திய தேசியநலனும் தேசிய பாதுகாப்பும் இந்துமாசமுத்திர கேந்திரப் பந்;தோபஸ்தும் எமதுதேசியப் போராட்டத்தோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. ஆகவே எமதுபிரச்சனையில் இந்தியா பேரார்வம்காட்டுவது தவிர்க்க முடியாததே.
ஆனால் தமிழீழ மக்களின் தேசியஇனப்பிரச்சனை எத்தன்மை வாய்ந்தது?இதன் தனித்துவமான விசேச குணாம்சங்கள்என்ன? இப்பிரச்சனைக்கு இறுதியான அரசியல் தீர்வு தான் என்ன? என்றஅடிப்படையான கேள்விகளைப் பொறுத்தவரை இந்திய அரசியல்வட்டாரங்களிலும் சரி - சர்வதேச அரசியல் அரங்கிலும் சரி - ஒரு தெளிவானகண்ணோட்டமும் சரியான அணுகுமுறையும் இருப்பதாகத் தெரிவில்லை. இது மிகவும்துரதிஸ்டமானது என்றே சொல்ல வேண்டும்.இந்த தெளிவற்ற நிலைமை தொடர்ந்துஇருக்கும்வரை எமது பிரச்சனைக்கு ஒருதிட்டவட்டமான நிரந்தரமான அரசியற் தீர்வுஏற்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில்இந்தியாவினதும் உலக நாடுகளினதும்ஏகோபித்த நல்லாதரவின்றி நாம் எமதுஅரசியல் இலட்சியத்தை அடைவதுசிரமமான காரியமே. இந்த நிலைமைக்குநாம் இந்தியாவைக் குறைகூற முடியாது. எம|து பிரச்சனை என்ன அதற்கு எத்தகையதீர்வை நாம் எதிர்பார்க்கின்றோம். என்பதில்தமிழ் விடுதலை இயக்கத்தால்ஒருமைப்பாடான ஏகோபித்த கருத்துமுன்வைக்கப்படாதது இந்தக் குழப்பத்திற்குகாரணமாகும். இதன் காரண கர்த்தாக்கள்எமது பழைய பாராளுமன்ற அரசியல்வாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

எமது மக்களின் தேசிய இனப்பிரச்சனையின்முழுவடிவத்தினையும் இதற்கான நிரந்தரதீர்வு என்ன என்பதனையும்கூட்டணித்தலைமை இந்திய அரசிடமோ சிங்கள அரசிடமோ உலகத்திற்கோதெட்டத்தெளிவாக எடுத்துரைக்க வில்லை. தனியரசு தவிர்ச்த சலுகைகள்பெறுவதற்காகவே இவர்கள் கொ|ழும்புக்கும் டெல்லிக்கும் இராசதந்திர காவடிஎடுத்துவந்தனர். ஒரு தேசிய இனமக்களை பிரிதிநிதித்துவப்படுத்துவதாகக்கூறிக்கொள்ளும் ஒரு தலைமைஅம்மக்களின் அடிப்படைப் பிரச்சனையிலும்அதற்கான அரசியல் தீர்விலும் குழம்பி நின்றுமற்றவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கட்|டும் என்ற மதிநுட்பமற்ற தந்திரோபாயத்தைகடைப்பிடித்து வந்ததாலேயே இந்தச்சிக்கல்ஏற்பட்டது.

கூட்டணி விட்ட தவறை இன்றைய தமிழீழப் புரட்சிகர விடுதலை அமைப்புக்கள் இழைத்துவிடக்கூடாது. நாம் எமது அரசியல் இலட்சியத்தில் உறுதியான தெளிவான தீவிரமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானதாகும்... நாம் எமது மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய விடுதலைக்காகப் போராடி வருகின்றோம். தேசிய சுயநிர்ணய உரிமை என்பது தனியரசை நிறுவும் உரிமையாகும். தமிழீழத் தனியரசே எமது போராட்ட இலட்சியம். என்ற அசிரியத் தலையங்கம் கூட்டணித்தலைமை விட்ட தவற்றை நாமும் செய்யாது புரட்சிகர விடுதலை இயக்கங்களான நாம் ஒற்றுமைப்பட்டு உறுதியுடன் எம் மக்கள் விடிவிற்காக பேசவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தது.

இந்திய வல்லாதிக்க நலன் சார்ந்த முன்னெடுப்பை சரியாக அடையாளம் கண்டு விடுதலைப்புலகள் சரியான புரிந்துணர்வுடன் முன்னெடுத்த அக்கூட்டு நிலைத்து நீடிக்கவில்லை.... இந்திய சதிவலைக்குள் சிக்கி 1985 செப்டம்பர் 2ஆம் நாள் புலிகளின் மேல் பழிவிழும் வகையில் தருமலிங்கம் ஆலாலசுந்தரம் படுகொலையை ரெலோத் தலைமை அரங்கேற்றியது.

நாராயன் சுவாமி ஈழத்தமிழர் விவகாரத்தை அதிகம் எழுதிய இந்திய பத்திரிகையாளர்களில் ஒருவர் தனது 1996இல் வெளிவந்த Tigers of Lanka from boys to Guerrillas என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்

The Tamils were confused by Indian policies and actions. While the militants were trained and armed to fight, the TULF was prodded to talk peace to Colombo. When the militant groups looked askance, they were told that the talks were a fake; when the TULF brass made queries, they were informed that peace was the ultimate goal and the militants were only being used to force Jayewardene to make concessions on the negotiating table. The TULF’s Amirthalingam played along, in the process angering his own supporters. Eventually he too felt let down by New Delhi

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் இக்குழப்பகரமான அணுகுமுறையை சரிவரப்புரிந்து தம்மிடையே புரிந்துணர்வை வளர்த்து ஒற்றுமையாக தம் மக்கள் நலன்கருதி ஒரு அரசியல் முன்னெடுப்பை செய்யாது இந்தியாவை வைத்துக் கொண்டு தங்கள் தனிநபர் நலன்களையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற கனவுடன் பயணிக்க முற்பட்டமையே தமிழ் தலைமைகளுக்கிடையிலான மோதல்களுக்கும் இயக்க மோதல்களுக்கும் கொலைகளுக்கும் காரணமாக அமைந்தது. இதன் சூத்திரதாரியாக அமைந்த இந்தியாவோ பார்த்தீர்களா தமிழர்களே அடிபட்டுக் கொள்ளுகிறார்கள் என முதலைக்கண்ணீப் வடித்தது!

இந்திரா காந்தி அம்மையார் படுகொலையின் பின்னர் திடுதிப்பென அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு ஆட்சிக்கட்டில் அமர்த்தப்பட்ட ராஜீவ் காந்திக்கு ஆரம்பத்தில் பல சவால்கள்... அவர் நியமனத்தை சனாதிபதி ஜெயில் சிங் ஏற்றுக் கொள்வாரா என்ற பெரும் சந்தேகமே முதலில் இருந்தது. இந்திரா காந்தி சீக்கிய மெய்ப்பாதுகாவலராலேயே கொலை செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்கியிலேயே ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதும் அதன் பின்னணியில் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இருந்தார்கள். சீக்கிய பொற்கோயில் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை பெரும்பான்மையான சீக்கியர்களை கோபம் கொள்ள வைத்திருந்த நிலையில் அதுவே இந்திரா காந்தி அம்மையாரின் கொலைக்கும் வித்திட்டுவிட அதைத் தொடர்ந்து நடந்து விட்ட சீக்கிய பொது மக்களின் படுகொலைகளால் சீக்கிய உறவு சீரழிந்து போயிருந்த நிலையிலேயே 85 ஆரம்பத்தில் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார்.

என் அரசியல் அனுபவம் கூட ராஜீவ் காந்தியின் வயது கிடையாது என ஜெயவர்த்தனா ஆரம்பத்தில் ராஜீவட காந்தியை எள்ளி நகையாடியது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. இந்நிலையிலேயே தான் அரசியல் ரீதியாகவும் சாதிப்பேன் எனக் காட்ட ராஜீவ் காந்தி சர்வதேச ரீதியாக இலங்கைப்பிரச்சனையையும் உள்ளுர் ரீதியாக சீக்கிய பிரச்சனையையும் கையில் எடுத்தார். உள்ளுர் ரீதியாக அப்போதிருந்த் முதன்மை சீக்கிய அமைப்பான அக்காலி தள் தலைவர் கர்சரன் சிங் லொங்காவாலுடன் 85 யூலை 24ஆம் நாள் ராஜீவ் காந்தி ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டார். ஆனால் அதந்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே குறுகிய நாட்களுக்குள் லொங்காவால் சீக்கிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

இதே சமயம் தான் இந்திரா காந்தி காலத்தில் சிறீலங்கா விவகாரத்தை கையாண்டவர்கள் ஓரங்கட்டப்பட புதியவர்கள் சிறீலங்காவுடனான ஓர் ஒப்பந்தத்திற்கும் முயன்றனர். அதின் ஓர் அங்கமாகவே திம்புப் பேச்சுவார்த்தைகள் முறையே 85 யூலை ஆகஸ்ட் மாதங்களில் அரங்கேறியது. அதுவம் எதிர்பார்த்தவாறு அமையாததே ராஜீவின் உச்ச கோபத்திற்கு காரணம். அதுவே புலிகளை இக்கட்டடில் மாட்ட யாழில் நடைபெற்ற தருமலிங்கம் ஆலாலசுந்தரம் கொலைகளுக்குமான பின்னணி எனக்கருதப்படுகிறது. ராஜீவின் கீழ் ஏற்பட்ட புதிய மாற்றங்களின் பிரகாரம் மலையாள அதிகாரிகள் குழு உச்சம் பெறுகிறது. நாராயணன் மொகனதாஸ் டிக்சிட் சிவசங்கர் மேனன் உன்னிகிருஸ்ணன் எனப்பலர் ஒருங்கினைகின்றனர்.

இங்கு மோகனதாஸ் பின்னர் வழங்கிய ஒரு செவ்விளை கவனத்தில் கொள்ளல் பொருந்தும்
The policy was formulated by G Parthasarathy, chairman of the Planning Committee, and M K Rasgotra, the foreign secretary, reportedly based on inputs from the intelligence agencies, RAW and IB headed respectively by Girish Saxena, R K Kapoor, and their successors. I must tell you one thing, the intelligence agencies work in such a top secret fashion on such sensitive issues that there is little scope for documentary and or other evidence being left behind; they are normally destroyed. Anyway, let me say that it was a dual policy. Being committed to Sri Lanka’s integrity on the one hand and permitting training of militant groups on Indian soil on the other.
No wonder Rajiv Gandhi, while inheriting the policy, had reportedly said he had his own reservations about the inherent contradictions in the policy. He asked, how can we then charge Pakistan with helping militants in Punjab and Kashmir? But the policy advisors and intelligence agencies, who had vested interests in continuing the policy, blocked Rajiv Gandhi on some pretext or the other from putting the block back.

86இல் பதவிவிலகிய மோகனதாஸ் இலங்கை கொள்கையில் இந்திரா காந்தி காலத்தவர்கள் தவறிழைத்துவிட்டனர் என்கிறார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார். அதில் ஒரு மலையாள இனத்தவரும் கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்க. ராஜீவ் காந்தி அதனுடன் உடன்படவில்லையாயினும் ஆரம்பத்தில் அதில் மாற்றம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்கிறார். மாற்றங்கள் நிகழ்ந்தபோது தான் 86இல் நான் முன்னர் குறிப்பிட்ட கைதுகளும் ஆயுதப்பறிப்பும் பெருத்த அவமானங்களும் நடந்தேறின....

தருமலிங்கம் ஆலாலசுந்தரம் கொலைகளை யார் செய்தது என்பது தெரியாது புலிகளே என்பதே அனுமானம் ஏனென்றால் எங்கள் உளவுத்துறைக்கு அதை துப்புத்துலக்க முடியவில்லை என்றவர்கள் 85இல் எவ்வாறெல்லாம் துப்புத் துலக்கினார்கள் என்பதை அவர்கள் வாயாலே சொன்னதைப் பாருங்கள்... 85இல் அமெரிக்க அலன் தம்பதிக்ள யாழில் வைத்து ஈ.பி.ஆர்.எல.எவினால் கடத்தப்பட்டர்ர்கள். அதற்கு பணமும் கைதிகள் விடுதலையையும் அவர்கள் கோரினர்.... கடத்தியவர்கள் தாங்கள் யார் என்று சொல்லவில்லை... அதை எப்படி கண்டு பிடித்தோம் அலன் தம்பதிகளை எப்படி விடுவித்தோம் என கமிசனர் மோகனதாசே சொல்லுகிறார் படித்துப் பாருங்கள்...
"One night I was sleeping in my house. I got a call from the US Consul General from Madras at 11 PM. He told me frantically that Mr. and Mrs. Allen, who are working as water resources experts in Jaffna had been kidnapped by militants. He wanted my assistance to rescue them. I told him how could I help him for the incident that had happened in Jaffna. He pressed that the President of the United States of America was interested. The Consul General said that a large amount of gold and six or so militants in Sri Lankan custody must be released. This must be done within 48 hours or else Mr. and Mrs. Allens would be shot dead.

Then something struck me and I asked the Consul General to find out the names of the militants whom they were asking for release. Then as soon as I placed the phone down, I got a call from G. Parthasarthy from Delhi repeating the same request. I rang up MGR and took his permission to take up this matter. I immediately proceeded to office calling all my principal officers to come to the office. As soon as I reached the office, I got a call from the US Consul General revealing the names of the militants whose release the kidnappers had wanted. My officers immediately said that they were from the EPRLF.

So the hunt began to find out whether there are any important EPRLF fellows in Madras. After about 24 hours, we got 3 or 4 of them sleeping in a house. There were also two women who were released. The catch was very important.

Among the people we caught were one Mr. Padmanabha who was later massacred by LTTE. Then, two, Varadharaja Perumal, the subsequent Chief Minister installed by the IPKF in East Sri Lanka, and three, General Douglas, self styled, who was the chief of militant wing of the EPRLF.

I asked my officers to take the three to a five star hotel. It was at about 2.00 A.M. with a lot of security, the officers started questioning. But upto 6.00 A.M. they did not budge. So I went there with two commandos with loaded revolver. I made the three fellows stand. I placed my revolver on the table and made the commandos aim with their AK-47 at them. There was silence for two minutes.

I looked at them straight and said:`It is your people who have made ransom demand on Mr. Allens. I will not allow you to open your mouth. Whatever happens to Allens will happen to you three right in this room.' After five minutes, General Douglas said that he would speak to his people in Jaffna to release Allens. I said 'Mind you, nothing in return; no gold; no release of their comrades.'

General Douglas contacted Jaffna and got the release of Mr. and Mrs. Allens and, within four hours, Mr. and Mrs. Allens were released at the residence of Bishop of Jaffna with their eyes blindfolded. There were kidnappings and counter kidnappings within the Sri Lankan militant groups in Tamil Nadu."

பார்தீர்களா? டக்லஸ் ஜயாவின் தலையில் துவக்கை வைத்து அலன் தம்பதிகளை விடுவித்த தன் வீரக்கதையை சொன்ன மோகன்தாஸ் நாராயணன் கூட்டால் தங்கள் கைப்பொம்மை சிறீ சபாரத்தினத்தை வைத்து செய்த கொலையை கண்டுபிடிக்க முடியவில்லை. செய்வித்தவர் எவ்வாறு தன்னையே கண்டுபிடி;ப்பார்!!!!86அல் இவர்களாலேயே தமிழ் ஆயுதக்குழுக்களும் அவர்களின் பயிற்சி முகாம்களும் குறித்து தயாரிக்கப்பட்ட் இரகசிய ஆவணத்தைப் பாருங்கள்....
LTTE:- 6 camps were reported being conducted by the LTTE in the districts of Anna (1 camp), Thanjavur West (1 camp), Thanjavur East (1 camp), Salem (1 camp, Madurai (1 camp) and Ramnad ( 1 camp) of Tamil Nadu. The total strength of trainees in these camps was reported to be 495 cadres including 90 female Tigers. The camp at Sirumalai (Anna district) was the only camp were all the 90 female Tigers were getting training along with 40 male Tigers. The largest LTTE camp was located at Kumbarapatti in Salem district. The training comprised Arms Training, swimming, boat driving and physical training. The camps were equipped with transport facilities such as Jeeps, Vans, motor cycles etc.
TELO:- Five camps organised by Tamil Eelam Liberation Organisation (TELO) were reported to be running in the districts of Ramnad ( 3 camps) and Salem ( 2 camps). There were totally 233 male cadres undergoing this training which comprised Physical Training, Arms training, swimming and boat driving.
EROS:- Eelam Revolutionary Organisers (EROS) were reported to be conducting two camps in the districts of Ramnad and Pasumpon Muthuramalingam districts. There were 8 male trainees in these camps which were imparting Physical Training and Arms Training.
EPRLF: The Eelam Peoples Revolutionary Liberation Front (EPRLF) was reported to be conducting 7 training camps in the districts of Thanjavur West (3 camps), South Arcot (2 camps), Trichy ( 1 camp) and Ramnad (1 camp) with a total strength of 73 male trainees who were being trained in Guerilla warfare, Physical Training and Arms training. These camps reportedly possessed sophisticated weapons such as Light Machine -guns as well as transport vehicles.
PLOT:- The Peoples Liberation Organisation for Tamil Eelam (PLOT) was conducting training in 18 camps located in the districts of Thanjavur West (11 camps), Pudukottai ( 4 camps), Tirunelvei East (2 camps) and Thanjavur East (1 camp). Totally 2236 cadres in addition to 94 female cadres were getting trained in these camps. The camps possessed transport facilities, boats and some weapons. Predominantly, the training comprised guerrilla warfare and also Physical Training, Swimming and Boat Driving.
Other assorted organisations were also conducting their camps in Tamil Nadu such as Tamil Eelam Army (TEA) - 2 camps, 31 trainees; TELA -Kanthan group ( 3 camps, 117 trainees); TELA-Rajan group (1 camp, 10 trainees); TENA (1 camp, 25 trainees); RELO ( 1 camp, 13 trainees; NLFT (1 camp, 2 trainees); ECRP (1 camp, 4 trainees) and TMPP ( 1 camp, 6 trainees).

அவ்வாறு பல அமைப்புகளின் விபரங்களை சேகரித்து வைத்திருந்தவர்களுக்கா? யாழில் நடந்த கொலைகள் இன்னும் மர்மமாக இருக்கிறது?